இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமில்லை.. பிக் பாஸ், கமலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேறியபின் ரசிகர்கள் பலரும் தங்களது ஆதரவை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் நெட்டிசன்கள் பலரும், பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்தது மிகவும் தவறான விஷயம். இதுவரை பிரதீப்பிற்கு எதிராக எந்த ஒரு பெண்ணும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், திடீரென ஒரே நாளில் எப்படி இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை வைத்தார்கள்.
ஏன் நிக்சன், ஐஷு-விடம் நடந்து கொள்வது யார் கண்ணுக்கும் தவறாக தெரியவில்லையா. அவரை யாருமே கேள்வி கேட்க வில்லை. ஆனால், ஒரே நாளில் வாக்கிங் கூட கொடுக்காமல் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்துவிட்டீர்கள் என பலரும் தங்களுடைய கோபத்தை சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இதுவரை எந்த ஒரு பிக் பாஸ் சீசனிலும் இப்படி நடந்ததே இல்லை. இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமில்லை என கூறி பிக் பாஸ் மற்றும் கமல் ஹாசனை வறுத்தெடுத்து வருகிறார்கள்.