நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 24 கேரட் தங்க ஐபோனை தொலைத்துவிட்டேன்.. கவலையில் பிரபல நடிகை..!

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 24 கேரட் தங்க ஐபோனை தொலைத்துவிட்டேன்.. கவலையில் பிரபல நடிகை..!

24 கேரட் தங்கத்தால் ஆன ஐபோனை நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொலைத்துவிட்டேன் என்றும், அதை கண்டுபிடித்து கொடுக்க ரசிகர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் பிரபல நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியை பார்க்க பல திரையுலக பிரபலங்கள் நேரில் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த போட்டியை நேரில் பார்த்து ரசித்த திரை நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை ஊர்வசி ரௌட்டாலா. இவர் லெஜண்ட் சரவணன் நடித்த ’லெஜன்ட்’ என்ற தமிழ் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் பல பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஊர்வசி ரெளட்டாலா தனது சமூக வலைத்தளத்தில் ’24 கேரட் சுத்த தங்கத்தினால் ஆன ஐபோனை நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொலைத்து விட்டேன், அந்த போனை கண்டுபிடிக்க தயவுசெய்து ரசிகர்கள் உதவி செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES