பிக் பாஸுக்கு வரும் பிரபல சீரியல் நடிகை.. எதிர்பார்க்காத ஒருவர்..!
பிக் பாஸ் 7ம் சீசன் வரும் அக்டோபர் 1ம் தேதி தொடங்க இருக்கிறது. அதில் போட்டியாளராக வர போகும் பிரபலங்கள் யார் யார் என்கிற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கிறது.
பல சின்னத்திரை பிரபலங்கள் ஷோவுக்கு வர இருக்கின்றனர். குறிப்பாக விஜய் டிவி பிரபலங்கள் அதிகம் பேர் வர இருப்பதாக தகவல் வருகிறது.
இந்நிலையில் தற்போது பிரபல சீரியல் நடிகை நிவிஷா பிக் பாஸ் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தெய்வமகள், அம்மன், முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே உள்ளிட்ட பல தொடர்களில் நிவிஷா நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.