கைது செய்யப்பட்ட ரவீந்தருக்காக தற்போது இன்ஸ்டாவில் பதிவு போட்ட மகாலட்சுமி- இதோ பாருங்கள்.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக இருந்து பின்பு சின்னத்திரை நடிகையாக மாறியவர் தான் மகாலட்சுமி. சீரியல்களில் தொடர்ந்து நடித்துவரும் இவர் தற்போது அன்பே வா தொடரில் வில்லியாக நடிக்கிறார்.
திருமணம் ஆகி 10 வயதில் இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். முதல் திருமணம் விவாகரத்தில் முடிய தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் திருப்பதியில் திருமணமும் நடந்தது. இவர்கள் கண்டிப்பாக ஒன்றாக இருக்க மாட்டார்கள், பிரிந்துவிடுவார்கள் என பல விமர்சனங்கள் வந்தன.
இந்த நிலையில் இவர்கள் அண்மையில் தங்களது முதல் திருமண நாளையும் கொண்டாடியுள்ளார்கள்.
அண்மையில் தயாரிப்பாளர் ரவீந்தர் ரூ. 16 கோடி மோசடி வழக்கில் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நடிகை மகாலட்சுமி, இதுவும் கடந்து போகும் ஒரு புதிய புகைப்படங்களுடன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் கணவருக்காக தான் மகாலட்சுமி இப்படியொரு பதிவு போட்டுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.