கவர்ச்சியும் கிளாசும் சேர்ந்த கீர்த்தி ஷெட்டி.. அட்டை விளம்பரத்திற்கு அட்டகாசமான போஸ்!
சென்னை: தென்னிந்திய திரையுலகில் இளம் நடிகைகளில் கவனம் ஈர்த்து வரும் கீர்த்தி ஷெட்டி, சமீபத்தில் பிரபல ஃபாஷன் இதழான ELLE டிஜிட்டல் கவர் ஸ்டாராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்காக நடத்தப்பட்ட சிறப்பு போட்டோஷூட்டில், அவர் கவர்ச்சியும், ஸ்டைலும் கலந்த தோற்ற ரசிகர்களை மெய்மறக்க வைத்துள்ளார்.
கீர்த்தி ஷெட்டி: இந்த போட்டோஷூட்டில், நடிகை கீர்த்தி ஷெட்டி அணிந்திருந்த உடை ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது. பல நிறங்களில் கண்ணாடி, மணிகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்டைலிஷ் கிராப் டாப்புடன், சிவப்பு நிற ட்ரேப் ஸ்கர்ட் இணைந்து, பாரம்பரியமும் நவீனமும் கலந்த லுக்கை உருவாக்கியுள்ளது. அந்த உடைக்கு பொருத்தமான ஜுவல்லரி, மேக்கப் மற்றும் இயல்பான ஹேர் ஸ்டைல் சேர்ந்து அவரின் அழகை மேலும் அதிகரித்துள்ளது. போட்டோஷூட்டில் அவர் கொடுத்துள்ள அட்டகாசமான போஸ்கள், அவரது கான்ஃபிடன்ஸையும், ஃபாஷன் சென்ஸையும் வெளிப்படுத்தி உள்ளது. குறிப்பாக, எளிமையான பின்னணியில் எடுத்த இந்த படங்கள், கீர்த்தியின் முகபாவனை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

கைவசம் உள்ள படம்: நடிகை கீர்த்தி ஷெட்டி விஜய்சேதுபதியின் மகளாக உப்பென்னா என்கிற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து 'தி வாரியர்' படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்த படத்தில் இடம் பெற்ற புல்லட் பாடல் இணையத்தில் பெரிய அளவில் டிரெண்டானது. அதன் பின் கீர்த்தி ஷெட்டி விக்னேஷ் சிவன் இயக்கிய எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். வித்தியாசமான கதை அம்சத்தை கொண்ட லவ் இன்சூரன்ஸ் கம்பேனி படத்தில் செல் போனுக்கு அடிமையான லைக் மற்றும் ஷேருக்கு ஆசைப்பட்டு, போன் மட்டும் தான் வாழ்க்கை என நினைக்கும் ஒரு பெண்ணாக நடித்திருந்தார். அந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது கீர்த்தி ஷெட்டி, ரவி மோகனுக்கு ஜோடியாக ஜீனி (Genie) படத்தில் நடித்து வருகிறார். ₹100 கோடி பட்ஜெட்டில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகிறது இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி ஆகியோர் நடித்துள்ளனர்.