விஜய் எப்படிப்பட்ட மனுஷன் தெரியுமா?.. பகீர் கிளப்பிய ஸ்வாகதா ஓபன் டாக்.. என்ன சொன்னாங்க?

விஜய் எப்படிப்பட்ட மனுஷன் தெரியுமா?.. பகீர் கிளப்பிய ஸ்வாகதா ஓபன் டாக்.. என்ன சொன்னாங்க?

சென்னை: பிக்பாஸில் கலந்துகொண்டும், சில படங்களில் நடித்தும் பிரபலமானவர் மாயா. அவரது சகோதரி ஸ்வாகதா. இவரும் சினிமா துறையில் இயங்கியவர்தான். பின்னணி பாடகியாக இருந்தவர். ஏகப்பட்ட ஹிட் பாடல்களை பாடியிருக்கும் அவர்; சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிரபலமான இசையமைப்பாளர் தன்னிடம் பாலியல் தொல்லை செய்ததாக குற்றஞ்சாட்டியிருந்தார். அவரது குற்றச்சாட்டு மிகப்பெரிய தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான மாயாவின் சகோதரி ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் இரவுக்கு ஆயிரம் கண்கள், இஸ்பேட் ராஜாவும் இதய ராணிய்ம், நோட்டா, பேச்சிலர் உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடகியாக இருந்திருக்கிறார். ஹிட் பாடல்களை பாடிய பெருமைக்கும் இவர் சொந்தக்காரர். இசை துறையில் பெரிய ரவுண்டு வருவார் என்று கணிக்கப்பட்டிருந்த சூழலில்; அனைத்தையும் துறந்துவிட்டு ரிஷிகேஷுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். அங்கிருந்தபடி தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.

Singer Swagatha Krishnan s Allegations Shake Industry Throwback Video on Vijay Goes Viral

பரபரப்பான பேட்டி: அந்தப் பேட்டியில் அவர், "ஏழு வருடங்களுக்கு முன்பு அந்த இசையமைப்பாளருடைய ஸ்டூடியோவில்தான் அந்த துன்புறுத்தல் எனக்கு நடைபெற்றது. என்னை அவர் கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்தார். அந்த ரூமில் சத்தம் போட்டால்கூட வெளியே கேட்காது. இப்போது நினைத்தாலும் எனது உடல் நடுங்குகிறது. அந்த ரூம் மறைக்கப்பட்டிருந்தது. அங்கு நடந்த அனைத்தும் ரகசிய கேமராவிலும் பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோவை வைத்துக்கொண்டு இதையெல்லாம் வெளியே சொல்லக்கூடாது என மிரட்டினார்.
 

பல பெண்களுக்கு: அந்த அறையில் என்னை போன்ற பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறது. எப்ஸ்டீன் ஃபைல்ஸைவிடவும் அந்த இசையமைப்பாளர் மோசமானவர். சின்ன குழந்தைகள் பாடல் பாட வந்தால் அவர்களை சிசிடிவியில் பார்த்துக்கொண்டே இருப்பார். அதை ஒருகட்டத்தில் அவருடைய பொழுதுபோக்காகவே மாற்றிக்கொண்டார். நான் ஆதாரத்துடன் அனைத்தையும் விரைவில் சொல்வேன். அவர் பெயரையும் அறிவிப்பேன். எந்தப் பெண்னுக்கும் எனக்கு நடந்தது மாதிரி நடந்திருக்க கூடாது.

தொடர்ந்து செய்கிறார்: அந்த இசையமைப்பாளர் தொடர்ந்து அதை செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு அவருடைய மனைவியும் உடந்தை. அவரிடமிருந்து பல பெண்கள் தப்பிக்க முடியாமல் இருக்கிறார்கள். சிலர் மட்டும்தான் தப்பித்திருக்கிறார்கள்" என குண்டை தூக்கி போட்டார். அவர் அப்படி பேட்டி கொடுத்ததும் அந்த இசையமைப்பாளர் யாராக இருக்கும் என்பதை தேடி கணித்து கிட்டத்தட்ட உண்மைக்கு நெருங்கிவிட்டார்கள். ஆனால் ஸ்வாகதாவே பெயரை சொல்லும்வரைக்கும் அமைதி காப்பது நலம் என்று அனைவரும் அமைதி காக்கிறார்கள்.

ட்ரெண்டாகும் பேட்டி: மேலும் ஸ்வாகதாவுக்கு ஆதரவு பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் அவரது வீடியோ ஒன்றை சோஷியல் மீடியாவில் சிலர் திடீரென ட்ரெண்டாக்கியுள்ளனர். அதில் விஜய் பற்றி பேசியிருக்கும் ஸ்வாகதா, "நான் கோட் படத்தில் கமிட்டானதும் உடனே நேரில் வா என சொன்னார் வெங்கட் பிரபு. நான் அங்கே கிளம்பி போனால் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. விஜய் ரொம்ப கேஷுவலாக நின்றுகொண்டிருந்தார். ரொம்ப தங்கமான மனிதர். முழு ஷூட்டிங்கும் என்னை பாட வைத்துக்கொண்டே இருப்பார். அவருடைய பாடல்கள், இளையராஜா பாடல்கள் என பல பாடல்களை பாட சொல்வார். இந்தப் பாடலை உன்னால் இப்படி பாட முடியுமா என்று சவாலும் விடுவார். அவர் உண்மையில் அவ்வளவு நல்ல மனிதர்" என்றார்.
 

LATEST News

Trending News

HOT GALLERIES