சூரியனே வெட்கப்பட்டு மறையுதே.. இடுப்பை காட்டி ரசிகர்களை வளைத்து போட்ட பூனம் பாஜ்வா!

சூரியனே வெட்கப்பட்டு மறையுதே.. இடுப்பை காட்டி ரசிகர்களை வளைத்து போட்ட பூனம் பாஜ்வா!

சென்னை: பாலில் ஊறவைத்த குலாப் ஜாமுன் போல கொழுக்கு மொழுக் என மென்மையாக கவர்ச்சியுடன் இளசுகளை கவரும் அழகுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை பூனம் பாஜ்வா. இவர் படங்களில் பெரிதாக வலம் வரவில்லை என்றாலும், இணையத்தில் அவ்வப்போது அட்டகாசமான போட்டோக்களை போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

மும்பையைச் சேர்ந்த பூனம் பாஜ்வா, 2005-ஆம் ஆண்டு மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்தார். தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், தமிழில் சேவல் படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயேஅழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார். அதன் பின் கச்சேரி ஆரம்பம், துரோகி, தெனாவட்டு ஜெயிக்கிற குதிரை, தம்பிக்கோட்டை போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தார். இடையில் படவாய்ப்பு குறைந்ததால் ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்துனகத்திரிக்காய், குப்பத்து ராஜா போன்ற படங்களில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தார்.

Poonam Bajwa instagram

நடிகை பூனம் பாஜ்வா: பட வாய்ப்பு குறைந்ததால், சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான பாலோவர்களை வைத்து இருக்கும் பூனம் பாஜ்வா, அடிக்கடி ஃபிட்னஸ், ஃபோட்டோஷூட் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். போட்டோஸ்: தற்போது பூனம் பாஜ்வா,குட்டி டவுசரில் சூரிய அஸ்தமன பின்னணியுடன் கவர்ச்சியான தோற்றத்தில் ரசிகர்களை மயக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ளார். அதில், பூனம் இயல்பான அழகு, சிரிப்புடன் இருக்கும் அவரின் அழகிய போஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இன்னும் அந்த charm குறையவே இல்ல என்றும், இது தான் ரியல் பியூட்டி என புகைப்படத்திற்கு கீழே கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகை பூனம் பாஜ்பாவிற்கு தற்போது படங்கள் வாய்ப்பு குறைவு என்றாலும், இணைய உலகில் தனக்கு என தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். இப்படி போட்டோக்களை பதிவிடுவதன் மூலம் படவாய்ப்பு வரும் என்கிற நம்பிக்கையில் தொடர்ந்து கவர்ச்சி தூக்கலான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
 

LATEST News

Trending News

HOT GALLERIES