வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் நடிகை விஜயலட்சுமி..!
அஜித் நடித்த ’காதல் கோட்டை’ என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் நடிகை விஜயலட்சுமி வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக் கமெண்ட் குவிந்து வருகிறது,.
நடிகை விஜயலட்சுமி, வெங்கட் பிரபு இயக்கிய ’சென்னை 600028’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் அவர் பல படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அவர், ஜெயம் ரவி நயன்தாராவின் ’இறைவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் இதில் அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ’அஞ்சாதே’ நாயகன் நரேனுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் விஜயலட்சுமி ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களை வைத்துள்ளார். அவர் சற்றுமுன் ஜிம்மில் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.