மாட்னடா பம்பரகட்ட மண்டையா! முன்னணி நடிகையுடன் நெருக்கமாக நடிகர் விஜய் தேவாரகொண்டா!
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் விரும்பப்படும் காதல் ஜோடி என்றால் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா தான்.
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் இவர்களது கெமிஸ்ட்ரி ஹிட் அடித்தது. திரையில் தொடங்கிய இவர்களது பிணைப்பு, திரைக்கு வெளியேயும் காதலாக மலர்ந்ததாக ரசிகர்கள் நம்புகின்றனர்.
ஆனால், இருவரும் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் சஸ்பென்ஸ் வைத்துள்ளனர்.
சமீபத்தில், ராஷ்மிகாவின் பிறந்தநாளான ஏப்ரல் 5, 2025 அன்று, இருவரும் கடற்கரை புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தனித்தனியாக பகிர்ந்தனர்.
"ஒரே இடத்தில் இருந்து தனி போட்டோவா? மாட்ன டா பம்பரக்கட்ட மண்டையா" என ரசிகர்கள் கிண்டலடிக்கின்றனர். புஷ்பா 2 புரோமோஷனில் ராஷ்மிகா, "என் காதலரின் பெயர் 'V' இல் தொடங்குகிறது" என்று கூறி, விஜய்யை சுட்டியதாக ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
ராஷ்மிகா, புஷ்பா 2, அனிமல் மூலம் பான் இந்தியா நட்சத்திரமானார். விஜய் நடிப்புடன் தயாரிப்பிலும் ஈடுபடுகிறார். இருவரும் வெளிநாட்டு பயணங்கள், டேட்டிங் என புகைப்படங்களால் கிசுகிசுகளை தூண்டுகின்றனர்.
ரசிகர்களுக்கு இவர்கள் காதலை உறுதிப்படுத்தாவிட்டாலும், திரையிலும் திரைக்கு வெளியேயும் "ட்ரீம் ஜோடி"யாகவே திகழ்கின்றனர்.