நம்மல்லாம் ஓடக்கூடாது, திரும்பி நின்னு அடிக்கணும்.. 'ரங்கோலி' டிரைலர்..!
புதுமுகங்கள் நடித்த ‘ரங்கோலி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
இரண்டு நிமிடங்கள் கொண்ட இந்த ட்ரெய்லரில் ஒரு பள்ளி மாணவனின் வலியை அற்புதமாக படம் ஆக்கி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. கார்ப்பரேஷன் ஸ்கூலில் படிக்கும் மாணவன் ஒரு சில பிரச்சனை காரணமாக பணக்கார மாணவர்கள் படிக்கும் பெரிய பள்ளியில் சேர்கிறார்.
அங்கு சக மாணவர்களுடன் ஏற்படும் சண்டை மற்றும் ஒரு மாணவியுடன் ஏற்படும் காதல் ஆகியவற்றை குறிப்பது தான் இந்த ’ரங்கோலி’ படத்தின் கதை. ஹமரேஷ், முருகதாஸ், பிரார்த்தனா, அமித் பார்கவ் உள்பட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்தை வாலி மோகன்தாஸ் இயக்கியுள்ளார்.
சுந்தரமூர்த்தி இசையில், மருதநாயகம் ஒளிப்பதிவில், சத்யநாராயணன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. பள்ளி மாணவர்களை குறித்த கதை அம்சம் கொண்டது என்பதால் இந்த படம் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.