பிரபல நிகழ்ச்சியில் நடக்கும் கேவலமான வேலை: வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வனிதா! முகம்சுழிக்கும் காரணம்

பிரபல நிகழ்ச்சியில் நடக்கும் கேவலமான வேலை: வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வனிதா! முகம்சுழிக்கும் காரணம்

நடிகை வனிதா பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதற்கு பல காரணங்கள் வெளிவந்தாலும், வனிதாவின் தரப்பு வெளியான பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எந்தவொரு சர்ச்சையாக இருந்தாலும், அதனை சமாளித்து வரும் வனிதா, சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

மேலும், நிகழ்ச்சியில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், பாலியல் சீண்டலுக்கு ஆளானதாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல பதிவுகளை பதிவிட்டு வரும் வனிதாவின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அவ்வாறு ரசிகர் ஒருவரின் பாராட்டுக்கு பதிலளித்துள்ள வனிதா, “பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களில் பெண்களே ஏன் துணை நிற்க வேண்டும்.

இது போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கற்றுக் கொள்ள வேண்டும். நோ மீன்ஸ் நோ” என குறிப்பிட்டுள்ளார். 

LATEST News

Trending News