இந்த வார எலிமினேஷன்: டேஞ்சர் ஜோனில் இருக்கும் 3 போட்டியாளர்கள்

இந்த வார எலிமினேஷன்: டேஞ்சர் ஜோனில் இருக்கும் 3 போட்டியாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நாமினேசன் பட்டியல் வெளியாகும் என்பதும், நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் ஞாயிறன்று வெளியேற்றப்படுவார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இதுவரை சாந்தி, அசல் கோளார், ஷெரினா ஆகிய 3 பேர் வெளியேற்றப்பட்டு உள்ள நிலையில் இந்த வாரம் ஞாயிறு அன்று வெளியேற்றப்படுவர் யார் என்ற கேள்வி பார்வையாளர்கள் மத்தியில் உள்ளன.

இந்த நிலையில் இந்த வாரம் அசீம், விக்ரமன், ஏடிகே, ஆயிஷா, தனலட்சுமி, ராம் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் உள்ள நிலையில் இவர்களில் 3 பேர் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்களில் மகேஸ்வரி மிக குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதாகவும் அவரை அடுத்து தனலட்சுமி மற்றும் ராம் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட மகேஸ்வரி விட சிறிது அதிகமாக வாக்குகளைப் பெற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அசீம் அதிக வாக்குகள் பெற்று முதலிடத்திலும் விக்ரமன், ஏடிகே, ஆயிஷா, ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர்.

இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று உள்ள மகேஸ்வரி, ராம் மற்றும் தனலட்சுமி ஆகிய மூவரில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்பதை ஞாயிறு வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News