"அவரை உருகி உருகி காதலித்தேன் - ஆனால்..." - பல வருட ரகசியத்தை போட்டு உடைத்த மீனா..!

"அவரை உருகி உருகி காதலித்தேன் - ஆனால்..." - பல வருட ரகசியத்தை போட்டு உடைத்த மீனா..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா, இவர் ரஜினி, அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 

சொல்லப்போனால் தென்னிந்திய சினிமாவில் ராணியாக வலம் வந்தவர். அப்பொழுது உள்ள நடிகர்கள் பலரும் மீனாவுடன் எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என ஆசைப்படுவார்கள் அந்த அளவு மிகவும் பிரபலம். குறிப்பாக மீனாவிற்கு கண்கள் தான் மிகவும் அழகு. ரசிகர்களை வெகுவாக தன்னுடைய கண்ணால் கட்டி போட்டு வைத்திருந்தார். 

இந்த நிலையில் மீனா சினிமா வாய்ப்பு குறையக்குறைய பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார், ஆனால் மீனா திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரை உருகி உருகி காதலித்துள்ளார். 

அது வேற யாரும் கிடையாது ரசிகர்களுக்கு பிடித்த பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தான். இதை சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ளார். நடிகர் ரித்திக் ரோஷன் மீது மீனா உருகி உருகி காதலித்ததாகவும் எப்படியாவது தன்னுடைய காதலை ரித்திக் ரோஷன் அவர்களிடம் கூறி திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் நினைத்தாராம். 

ஆனால் ரித்திக் ரோஷனுக்கு திருமணம் என்ற செய்தியைக் கேட்டு தன்னுடைய இதயமே நின்று விட்டதாக தன்னுடைய காதல் உணர்வுகளை பகிர்ந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மீண்டும் ரிதிக் ரோஷன் அவர்களை சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES