'லியோ' படத்தின் அர்ஜுன் கேரக்டர் இதுதான்.. இன்று மாலை ஒரு ஆச்சரிய அறிவிப்பு..!
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய், த்ரிஷா மட்டுமின்றி இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது என்பதும் பாலிவுட் திரை உலகினர் சிலர் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவரது கேரக்டர் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி சற்று முன்னர் ’லியோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் ஹரால்டு தாஸ் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அர்ஜுன் இந்த படத்தில் ஹரால்டு தாஸ் கேரக்டரில் தான் நடித்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை விஜய் மற்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.