'அதை சொல்ல நீங்க யாரு? தனலட்சுமியை லெஃப்ட் ரைட் வாங்கிய கமல்ஹாசன்!

'அதை சொல்ல நீங்க யாரு? தனலட்சுமியை லெஃப்ட் ரைட் வாங்கிய கமல்ஹாசன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான தனலட்சுமியை கமல்ஹாசன் கடந்த வாரம் பாராட்டி நிலையில் இந்த வாரம் லெஃப்ட் ரைட் வாங்கியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது

சற்று முன் வெளியாகிய புரமோவில், ‘உங்களிடம் ஒரு கருத்தை சொல்வதற்கு வீட்டில் உள்ளவர்கள் தயங்குகிறார்கள் என்பது உங்களுக்கு புரியுதா? ஏன் என்று நான் சொல்லட்டுமா? உங்கள் கோபம்தான்

எதுக்கு என்னை பார்த்து கோபம் என்று சொல்கிறீர்கள்?

இல்லம்மா நீங்கள் கோபப்பட்டதால் நான் கூறினேன்

நான் அப்படித்தான் கோபப்படுவேன்

இல்ல நான் படக்கூடாது சொல்லலை, பட்டுட்டிங்கன்னு சொல்றேன்

நான் கோவப்படாதுன்னு சொல்ல நீங்க யாரு?

சரிம்மா நீ கோவப்படு, படாம இரு

ரெண்டுமே நீங்க சொல்லக் கூடாது

என்று தனலட்சுமி மற்றும் சக போட்டியாளர்கள் பேசியதை போல் கமல்ஹாசன் மாறிமாறி பேசிக்காட்டி அவரை லெஃப்ட் ரைட் வாங்கினார்.

ஏற்கனவே தனலட்சுமி இந்த வாரம் முழுவதுமே சக போட்டியாளர்களை நக்கல், நய்யாண்டியுடன் சில சமயம் கோபமாகவும் பேசியதை பார்த்து பார்வையாளர்கள் கடுப்பான நிலையில் அவருக்கு சரியான பாடத்தை கமல்ஹாசன் புகுத்தியதை அடுத்து இனிமேலாவது தனலட்சுமி சரியான கோணத்தில் விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News