பேங்க் கொள்ளை மட்டுமல்ல, இன்னொரு டுவிஸ்ட்டும் இருக்கும்: 'ஏகே 61' படம் குறித்த தகவல்

பேங்க் கொள்ளை மட்டுமல்ல, இன்னொரு டுவிஸ்ட்டும் இருக்கும்: 'ஏகே 61' படம் குறித்த தகவல்

அஜித் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் உருவாகிவரும் ’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது என்பதும், சென்னை அண்ணா சாலை போன்று அமைக்கப்பட்ட செட்டில் சுமார் 80% படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு புனேயில் நடைபெற இருப்பதாகவும் அதன் பின்னர் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க இருப்பதாகவும் அத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை வங்கிக் கொள்ளை சம்பந்தப்பட்ட கதை என்றும் இந்த படத்தில் அஜித் இரண்டு கேரக்டரில் நடித்திருக்கிறார் என்றும் கூறப்பட்டது. தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமான வங்கி ஒன்றில் நடந்த கொள்ளையை அடிப்படையாக கொண்டுதான் இந்த படத்தின் திரைக்கதை எழுதப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலும் இந்தியாவில் நடந்த பிரபலமான கொள்ளையை வைத்து தான் படம் எடுக்கப்பட்டு இருந்தது. அதே போல் தான் ஒரு உண்மை பேங்க் கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் பாடல்களே இல்லை என்றும் இரண்டு தீப் பாடல்கள் மட்டும் அவ்வப்போது வந்து போகும் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த படம் குறித்து வந்துகொண்டிருக்கும் செய்திகளால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES