'குக் வித் கோமாளி சீசன் 3' ஃபைனல்: திடீரென ரக்சன் வெளியேறியதற்கு இதுதான் காரணமா?

'குக் வித் கோமாளி சீசன் 3' ஃபைனல்: திடீரென ரக்சன் வெளியேறியதற்கு இதுதான் காரணமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிகழ்ச்சிகளில் ஒன்று ’குக் வித் கோமாளி என்பதும் இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே. இதில் பழம்பெரும் காமெடி நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தி ஸ்ருதிகா டைட்டில் பட்டம் வென்றார் என்பதும் அவருக்கு ஐந்து லட்ச ரூபாய் பரிசு அளிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை சீசன் 1 முதல் மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கி வரும் ரக்சன், திடீரென சீசன் 3 பைனல் நிகழ்ச்சியின் போது பாதியில் வெளியேறினார். அதனால் அவருக்கு பதிலாக மணிமேகலை தொகுப்பாளினியாக ஃபைனல் நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 பைனல் நிகழ்ச்சியின் போது திடீரென வெளியேறியதற்கு என்ன காரணம் என்பது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் ரக்சன் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தபோது திடீரென அதிக காய்ச்சல் ஏற்பட்டதாகவும், ஒருவேளை கொரோனா தொற்றாக இருக்குமோ என்ற அச்சத்தால், தன்னால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாகவும் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் பரிசோதனை செய்து பார்த்த போது தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். குக் வித் கோமாளி சீசன் 3 பைனல் நிகழ்ச்சியில் ரக்சன் கலந்து கொள்ளாததற்கு காய்ச்சல் தான் காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES