'குக் வித் கோமாளி' சீசன் 3 டைட்டில் வின்னர் இவரா? கசிந்த புகைப்படங்கள்

'குக் வித் கோமாளி' சீசன் 3 டைட்டில் வின்னர் இவரா? கசிந்த புகைப்படங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை கடந்த இரண்டு ஆண்டுகளாக பெற்றது போலவே மூன்றாவது சீசனும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வாரம் வைல்ட்கார்டு போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே போட்டியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்தோணிதாசன் மற்றும் மனோபாலா ஆகியோர் சில காரணங்களால் கலந்து கொள்ள முடியாத நிலையில் வைல்ட் கார்டு போட்டியில் சந்தோஷ் பிரதாப், கிரேஸ் கருணாஸ், ராகுல் தாத்தா, சுட்டி அரவிந்த் மற்றும் ரோஷினி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த வைல்ட்கார்டு போட்டியில் கிரேஸ் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இறுதிப்போட்டிக்கான படப்பிடிப்பு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் கோமாளிகளில் ஒருவரான ஷிவாங்கி தனது சமூக வலைத்தளத்தில் ’குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சி முடிந்தது என்றும் அடுத்த சீசனில் சந்திப்போம் என்றும் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின்படி குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டில் வின்னர் வித்யூலேகா என்று கூறப்படுகிறது. இது குறித்த சில புகைப்படங்களும் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அனேகமாக அடுத்த வாரம் பைனல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வித்யூலேகா தான் டைட்டில் வின்னரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

HOT GALLERIES