தமிழில் மிஸ் செய்த பிக்பாஸ் டைட்டிலை தெலுங்கில் வென்ற பிரபல நடிகை!

தமிழில் மிஸ் செய்த பிக்பாஸ் டைட்டிலை தெலுங்கில் வென்ற பிரபல நடிகை!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டத்தை மிஸ் செய்த பிரபல நடிகை ஒருவர் தெலுங்கு பிக் பாஸ் நான்ஸ்டாப் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்களில் ஒருவர் நடிகை பிந்துமாதவி என்றும் அவர் அந்த சீசனில் நான்காவது ரன்னர் அப் இடத்தை பிடித்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் தொடங்கிய பிக் பாஸ் தெலுங்கு நான்ஸ்டாப் ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பிந்துமாதவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் தகுதி பெற்ற ஆறு போட்டியாளர்களில் பிந்து மாதவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் ஃபினாலே நிகழ்ச்சி நடந்த நிலையில் அதில் பிந்துமாதவி டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார். அவருக்கு ஐம்பது லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இதனையடுத்து தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை மிஸ் செய்த பிந்து மாதவி தெலுங்கு பிக்பாஸ் நான்ஸ்டாப் நிகழ்ச்சியில் டைட்டில் பெற்றதை அடுத்து அவருக்கு அவரது ஆர்மியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .

தமிழில் ’வெப்பம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான பிந்து மாதவி அதன்பின் ’கழுகு’ ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்பட பல படங்களில் நடித்தார். தற்போதும் அவர் மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

HOT GALLERIES