கணவருடன் ரொமான்ஸ்: 'ஹலோ டாக்டர்' கிரிஜாஸ்ரீயின் வைரல் புகைப்படங்கள்!

கணவருடன் ரொமான்ஸ்: 'ஹலோ டாக்டர்' கிரிஜாஸ்ரீயின் வைரல் புகைப்படங்கள்!

இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் உள்ள இளைஞர்களுக்கு கிரிஜாஸ்ரீயை தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. சமையல் மாந்திரீகம், உங்கள் நண்பன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு மருத்துவரிடமிருந்து பதில் பெற்றுத் தரும் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கினார் என்பதும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் பிரபலமானார் என்பதும் அது மட்டுமன்றி அவர் கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்த நிகழ்ச்சி ஒரு மருத்துவ நிகழ்ச்சி என்பதை மனதில் கொண்டே தான் தொகுத்து வழங்கியதாகவும், அதில் நடக்கும் உரையாடலைப் பார்த்து தன்னை விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து விரிவான விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்ச்சியால் பல இளைஞர்கள் தவறான பாதையிலிருந்து விடுபட்டு இருக்கிறார்கள் என்றும், பல பெண்கள் தாய்மை பாக்கியம் பெற்றிருக்கிறார்கள் என்பதை பெருமையுடன் நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் தனது நீண்டநாள் நண்பரை திருமணம் செய்துகொண்ட கிரிஜாஸ்ரீ, அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கணவருடன் கிளாமர் உடையில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News