நடிகர் விஜய் வீட்டுக்கு முன் திடீர் போராட்டம்
நடிகர் விஜய்யின் வீட்டுக்குள் தங்களை அனுமதிக்குமாறு ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நபர்கள் சிலர் வென்றிருந்தார்கள். அரசியல் அரங்கில் இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னோட்டமாக இந்த வெற்றி அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற ரசிகர்களை சந்திப்பதற்காக நடிகர் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் மட்டும் அவரது வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு தற்போது விஜய் வாழ்த்து கூறி வருகிறார்.
இந்த நிலையில் இந்தத் தகவல் அறிந்து விஜய்யின் வீட்டின் முன் திரளாக ரசிகர்கள் கூடினர். அவர்களை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து விஜய் வீட்டின் முன் அமர்ந்து ரசிகர்கள் சிலர் தங்களை வீட்டுக்குள் அனுமதிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.