"இன்னும் என் கதைய முழுசா சொல்லல".. அண்ணாச்சியிடம் மனதை திறந்து உருக்கமாக கொட்டிய பாவனி!

"இன்னும் என் கதைய முழுசா சொல்லல".. அண்ணாச்சியிடம் மனதை திறந்து உருக்கமாக கொட்டிய பாவனி!

பாவனி ரெட்டி, தன்னுடைய கணவர் இறந்தது குறித்து பிக்பாஸில் நிறைய முறை தனித்தனியாக போட்டியாளர்களிடம் கூறி வந்திருந்தார்.

 

அதன்பிறகு பாவனி ரெட்டிக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. அவர் முழுமையாக தன்னுடைய கதையை கூறி இருந்தார். அதில் தன்னுடைய கணவர் நான்கைந்து வருடங்களுக்கு முன்பாக மதுபோதையில் தற்கொலை செய்து கொண்டது முதல், தன்னுடைய அண்ணன் போல் பழகிய ஒருவருடன் தன்னை இணைத்து பேசப்பட்டதும், அதற்காக தன் கணவனை திட்டம் தீட்டி தானே கொல்ல முயன்றதாகவும் ஊரார் பேசியது வரை அனைத்தையையும் கூறி வருத்தப்பட்டார்.

 

பின்னர் போலீசே தன்னுடைய கணவரின் இறப்பில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று அனுப்பி வைத்ததாகவும், எனினும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவற்றை எல்லாம் மனம் திறந்து பேசி விட்டதால் பாரம் நீங்கியதாகவும் கூறி இருந்தார். மேலும் பேசிய பாவனி ரெட்டி, தன்னுடைய மாமியார் குடும்பம் தனக்கு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

 

இதனிடையே கணவருக்கு பிறகு இரண்டாவதாக தான் காதலில் விழுந்ததாகவும் அதுவும் திருமணத்தில் சென்று முடியவில்லை என்றும் கூறி வருந்திய பாவனி,  தற்போது அண்ணாச்சியிடம் தான் இன்னும் தன் கதையையும் மனநிலையையும் முழுதாய் சொல்லி முடிக்கவில்லை என்றும், தன் நிலை கடைசிவரை தனிமை தான் போல என்று தோன்றுகிறது என்றும் கூறி புலம்பிக் கொண்டிருக்கிறார்.

 

 

அண்ணாச்சியோ, “நாங்க எல்லாம் இருக்கோம்ல?” என்று கலகலப்பாக பேசி பாவனியை ஆறுதல் படுத்துகிறார். மேலும்  “கஷ்டமாக இருந்தால் அண்ணாச்சி வந்து கலகலப்பாக பேசுவார் என்று நீ அன்னைக்கு குறிப்பிட்டு எனக்கு நீ லைக் போட்ட விஷயம் எனக்கு பெருமையாக இருந்தது!” என்றும் பாவனியிடம் அண்ணாச்சி கூறியிருந்தார்.

 

அவருக்கு மிகச்சிறிய வயதிலான தங்கையாக தான் இருப்பதாக கூறிய பாவனி, கொஞ்சம் வயதான அண்ணன் என அண்ணாச்சியை குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பாவனி, தன் வாழ்க்கை, எதிர்காலம், மறுமணம், வாழ்க்கைத்துணை, தனிமை உள்ளிட்டவை பற்றிய குழப்பத்திலும் கவலையிலும் இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிடுவதுடன் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES