பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலால் கடும் வருத்தத்தில் நடிகை ஷீலா- ஏன் தெரியுமா, அவரே கொடுத்த பேட்டி
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினர் கடந்த ஒரு வாரமாக நம்மை அழ வைத்து வருகிறார். சீரியல் புரொமோவின் கீழ் அனைவரும் வந்து அழ வைத்துவிட்டார்கள், கஷ்டமாக இருக்கிறது என்றெல்லாம் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த வார புரொமோவில் கண்ணன் தனது அம்மாவின் முகத்தை கடைசி வரை பார்க்க முடியவில்லை என்று கதறி கதறி அழுகிறார். அந்த புரொமோ பார்க்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது.
நடிகை ஷீலா சீரியல் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் நாளில் இருந்து 3 வருடங்களாக நடித்திருக்கிறேன்.
நல்ல ரீச் கொடுத்த சீரியல் இது, இதிலிருந்து பாதியிலேயே செல்கிறோம் என்ற போது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது.
மற்றபடி அந்த காட்சிகளில் நடித்தது எல்லாம் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கடைசி காட்சிகளில் வெயில், அதிக கூட்டம் போன்ற சிரமம் தான் இருந்தது என கூறியுள்ளார்.