செம ஸ்டைலாக மாறிய சிம்பு.. 'எஸ்டிஆர் 48' படம் வேற லெவல் தான்..!

செம ஸ்டைலாக மாறிய சிம்பு.. 'எஸ்டிஆர் 48' படம் வேற லெவல் தான்..!

நடிகர் சிம்பு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு தயாராக அவர் வெளிநாடு சென்றார் என்பதும் உடலை ஃபிட்டாகி திரும்பினார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

சமீபத்தில் மலேசியாவில் நடந்த யுவனின் இசை நிகழ்ச்சியில் சிம்பு கலந்து கொண்ட நிலையில் அவரது வித்தியாசமான லுக்கை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இந்த நிலையில் தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த புகைப்படத்தில் கிட்டத்தட்ட 15 வருடத்திற்கு முன்பு இருந்த சிம்பு போன்று ஸ்லிம் ஆகவும் அதே நேரத்தில் தாடி மற்றும் கூலிங் கிளாஸ் உடன் ஸ்டைலிஷ் ஆகவும் உள்ளார். இந்த புகைப்படங்களை பார்க்கும் போது ’எஸ்டிஆர் 48’ படம் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் பட்ஜெட் இதுவரை இல்லாத அளவில் சிம்புவின் பெரிய பட்ஜெட் படம் என்றும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES