இந்திரஜா ரோபோஷங்கர் மகனுக்கு பெயர் வைத்த கமல்ஹாசன்! என்ன பெயர் தெரியுமா
பிரபல நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா பிகில் படத்தில் விஜய் உடன் நடித்து பிரபலம் ஆனவர். அதன் பிறகு சர்வைவர் உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருந்தார்.
இந்திரஜாவுக்கு கடந்த வருடம் கார்த்திக் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது. அதன் பின் கர்ப்பமாக இருந்த அவருக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு பெயர் வைக்க கமல்ஹாசனிடம் சென்று இருக்கிறது ரோபோ ஷங்கர் குடும்பம். அவர் குழந்தைக்கு நட்சத்திரன் என பெயர் சூட்டி இருக்கிறார்.
அதை மகிழ்ச்சியாக இந்திரஜா இன்ஸ்டாவில் தெரிவித்து இருக்கிறார்.