ஷிவாங்கியின் காதலர் இவரா..? – வியப்பில் ரசிகர்கள்..!
விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவாங்கி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் களம் இறங்கிய அவருக்கு சூப்பர் சிங்கர் அடையாளத்தை கொடுத்தது.
அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இரண்டு, மூன்று சீசன்களில் கோமாளியாக பங்கேற்ற அவர், பின் சமையல் போட்டிகளிலும் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.
நன்றாக சமையலிலும் ஈடுபட்டார். பலவிதமான உணவுகளை சமைத்து காட்டி ஷெப் நடுவர்களின் பாராட்டை பெற்றார்.
இதன் மூலம் விஜய் டிவி பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த அவர், ஒரு கட்டத்தில் அவரே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
இது ஷிவாங்கியின் ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை தந்தது.
டான், என்ன சொல்லப் போகிறாய், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், காசேதான் கடவுளடா, சாட்பூட் த்ரீ போன்ற படங்களில் சின்ன சின்ன ரோல்களில், ஷிவாங்கி நடித்தும் இருக்கிறார்.
சமீபத்தில் தனது பிறந்தநாளில் ஷிவாங்கி, நேரலையில் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு அதில் பதிலளித்தார்.
அப்போது விஜய்டிவி தொகுப்பாளர் தர்ஷனும் அந்த நேரலையில் கலந்துக்கொண்டு ஷிவாங்கிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
அப்போது நீ இந்த பிறந்த நாளில் உன் காதலரை சந்திக்க வாழ்த்துகள் என்றும் கிண்டலாக கூறினார். மேலும், நீ யாரை காதலிக்கிறாய் என்றும் தர்ஷன் கேட்டார்.
நான் யாரை சொல்வது, நான் இன்னும் அந்த நபரை பார்க்கவில்லை. இந்த வருடமாவது அவரை பார்த்துவிட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
என்னுடைய காதலனை நான் தேடிக்கொண்டு இருக்கிறேன் என்று விளையாட்டாக ஷிவாங்கி சொல்லி இருக்கிறார்.
ஷிவாங்கியின் காதலர் யார் என்று இன்னும் முடிவாகாத நிலையில் இருப்பதால், இன்னும் இவருக்கு ஒரு காதலர் அமையவில்லையா, என ரசிகர்கள் வியப்பில் இருந்து வருகின்றனர்.