கன்றாவி.. கைக்குழந்தை கூட இதைவிடப் பெரிய ஜட்டி போடும்.. வரம்பு மீறிய கவர்ச்சியில் பிக்பாஸ் வனிதா!
நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் திரைப்படம், அதன் கவர்ச்சி காட்சிகள் மூலம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் வனிதா, குட்டியான ஆடைகளை அணிந்து தனது உடலழகு தெரியும் வகையில் நடித்துள்ளார். குறிப்பாக, ஜட்டி போன்ற குறுகிய ட்ரவுசரும், இறுக்கமான மேலாடையும் அணிந்து, தனது தொடைகள் மற்றும் உடலமைப்பு எடுப்பாகத் தெரியும் காட்சிகளில் தோன்றியுள்ளார்.
இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. சிலர், “கைக்குழந்தைகள் கூட இதைவிடப் பெரிய ஜட்டி போடும்.. கன்றாவி..” என விமர்சித்து, படத்தின் ஆபாசத்தன்மை குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், மறுபுறம், வனிதாவின் துணிச்சலையும் பலர் பாராட்டி வருகின்றனர். 40 வயதிலும் கவர்ச்சியான தோற்றத்துடன் திரையில் தோன்றி, உடல் எடை அல்லது வயது என்பது கவர்ச்சியான ஆடைகளை அணிவதற்கு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் எனப் பலர் கருதுகின்றனர்.
இப்படம், வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில், வனிதாவே இயக்கி நடித்துள்ளது. ராபர்ட் மாஸ்டர், ஷகீலா, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம், 40 வயது பெண்ணின் குழந்தை பெறும் ஆசையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் கவர்ச்சி காட்சிகள் காரணமாக இப்படம் வயது வந்தோருக்கான படமாகவே பார்க்கப்படுகிறது. இணையத்தில் வைரலாகும் இந்தக் காட்சிகள், வனிதாவின் தைரியமான அணுகுமுறையைப் பறைசாற்றுவதாகவும், அதேசமயம் சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது.