ஒரே அறையில் காமெடி நடிகையுடன் வடிவேலு கும்மாளம்.. புட்டு புட்டு வைத்த பிரபல இயக்குனர்!
பிரபல இயக்குனர் வி.சேகர் சமீபத்தில் ‘மீடியா சர்க்கிள்’ என்ற யூட்யூப் சேனலில் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேட்டியில், விசேகரிடம் நகைச்சுவை நடிகர் வடிவேல் மற்றும் நடிகை கோவை சரளா தொடர்பான ஒரு சுவாரஸ்யமான கேள்வி எழுப்பப்பட்டது.
“சார் வணக்கம். இப்போது அடுத்தடுத்த படங்களில் வடிவேல் மற்றும் கோவை சரளா இருவரும் ஜோடியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் இல்லையா? முதல் படத்தில் தொடங்கி நடிக்கக் கூடாது என்று சொன்னது வடிவேல் சாருக்கு தெரிந்திருக்கும்.
ஆனால் பிறகு அவர் எப்படி அப்படி நடித்துவிட்டார்? இப்போது அவர்கள் பிரிக்க முடியாத ஜோடியாகிவிட்டனர் இல்லையா?” என்று கேள்வி முன்வைக்கப்பட்டது.இதற்கு பதிலளித்த விசேகர், ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
“திடீரென ஒரு நாள், ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்த ஒரு சம்பவம். ‘சார், எதற்கு ரெண்டு ரூம் போடணும் மேக்கப் பண்ண? ஒரே ரூம் போதும் சார். பட்ஜெட்டை கம்மி பண்ணுங்க சார்’ என்று வடிவேலு சொன்னான். நான் மேனேஜரிடம் ‘எதார்த்தமா சொல்றேன், ஒரு ரூம் மிச்சம் இருக்கு’ என்று கேட்டேன்.
ஆனால் அவன் ‘மேக்கப் தான் போடவா போறாங்க’ என்று சொன்னான். நான் வேற என்ன? என்று கேட்டேன். ரூமை சாத்துனாங்கனா ரொம்ப நேரம் கதவையே தொறக்க மாட்டாங்க டார்.. என்று சொன்னான்.
அப்போ தான் புரிஞ்சது, ரெண்டு பேரும் ஒரே ரூம்ல மேக்கப் போடுறாங்கன்னா.. ரொம்ப நேரம் கதவை தொறக்கலனா என்ன அர்த்தம்? ஆஹா! அடுத்த படத்திலிருந்து நீ அவ கூட சேர்ந்து நடிக்க கூடாது என்று சொல்லிட்டேன்,” என்று விசேகர் நகைச்சுவையாகவும் தீவிரமாகவும் பதிலளித்தார்.
இந்த பேட்டி வடிவேல் மற்றும் கோவை சரளாவின் நடிப்பு பயணம் மற்றும் அவர்களது தொடர்பு குறித்து புதிய ஒளியை வீசியுள்ளது. ரசிகர்கள் இதை பகிர்ந்து, விசேகரின் நேர்த்தியான பதிலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களின் பின்னணி கதைகளை மீண்டும் பேச வைத்துள்ளது.