35 லட்சம் பரிசு வாங்க மறுத்த பிரியங்கா மோகனுக்கு நேர்ந்த கொடுமை.. அதிர வைக்கும் தகவல்..

35 லட்சம் பரிசு வாங்க மறுத்த பிரியங்கா மோகனுக்கு நேர்ந்த கொடுமை.. அதிர வைக்கும் தகவல்..

நடிகை பிரியங்கா மோகன் தனது பப்ளிசிஸ்ட் (பி.ஆர்) குழுவை மாற்றிய பின்னர் அவர் மீது அவதூறான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்பு அவர் தனது பி.ஆர் பணிகளை நடிகர் விஜய் நடத்தும் ‘ரூட்’ என்ற பிரபல பி.ஆர் நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்ததாகவும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அந்த நிறுவனத்தை விட்டு விலகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, அவரது புகழை கெடுக்கும் வகையில் இழிவான பிரச்சாரங்கள் நடத்தப்படுவதாக விஜய் ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த சர்ச்சையில், பிரியங்கா மோகன் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மற்றும் ரித்தீஷ் இணைந்து ஒரு பார்ட்டியில் பங்கேற்றதாகவும், அப்போது 35 லட்சம் ரூபாய் பரிசு தொகையை பெற மறுத்ததாகவும் விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர்.

இதனால், அவர் மீது தொடர்ந்து அவதூறு பிரச்சாரங்கள் நடத்தப்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் இது தொடர்பாக பல விமர்சனங்கள் மற்றும் கருத்துகள் பதிவாகி, பிரியங்கா மோகனின் புகழை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த செய்திகள் பரப்பப்படுவதாக ரசிகர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை பிரியங்கா மோகனின் தனிப்பட்ட முடிவுகளால் ஏற்பட்ட தாக்குதலாக பார்க்கிறார்கள், அதே நேரம் விஜய் ரசிகர்கள் இதை அவரது முன்னாள் பி.ஆர் குழுவின் பழிவாங்கல் என்று கருதுகின்றனர்.

இதனால், பிரியங்கா மோகனின் திரைப்பட பயணம் மற்றும் அவரது புகழ் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த சர்ச்சை தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லாத நிலையில், இது சமூக வலைதளங்களில் மேலும் வைரலாகி, தமிழ் சினிமா உலகில் புதிய பேச்சை உருவாக்கியுள்ளது.

LATEST News

Trending News