ஆணுறை விளம்பரத்தில் நடிகை காஜல் அகர்வால்.. அதிலும் அந்த டயலாக்.. வெடித்த சர்ச்சை!
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
பொதுவாக, முன்னணி நடிகைகள் மதுபானம், சூதாட்டம், ஆணுறை போன்ற விளம்பரங்களில் நடிப்பதை தவிர்க்கும் நிலையில், காஜல் இதற்கு மாறாக துணிச்சலுடன் முன்னோடியாக முன்னணி பிராண்ட் ஒன்றின் ஆணுறை விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
ஆனால், இந்த முடிவு பலத்த எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.நடிகை சன்னி லியோன் நடித்த ஆணுறை விளம்பரம் பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பள்ளி-கல்லூரிகள் அருகே காட்சிப்படுத்தப்பட்டு, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த விளம்பரங்கள் முகச்சலிப்பை ஏற்படுத்துவதாகவும், சிலர் இதைப் பயன்படுத்தி பொதுமக்களை தொந்தரவு செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து, பொது இடங்களில் ஆணுறை விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம், இவ்விளம்பரங்களை பொது இடங்களில் காட்சிப்படுத்துவது அவசியமற்றது என்று கூறி, அவற்றை அகற்ற உத்தரவிட்டது.
மேலும், குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்கும் நேரமான காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆணுறை விளம்பரங்களை ஒளிபரப்புவதற்கு தடை விதித்து, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே ஒளிபரப்பலாம் என உத்தரவு பிறப்பித்தது.
இந்த சூழலில், காஜல் அகர்வால் ஆணுறை விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமான தகவல் இணையத்தில் பரவியதால், அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், அவர் பெற்ற முன்பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு, விளம்பரத்தில் நடிக்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார்.
ஆனால், இதோடு நிற்காமல், காஜல் தனது தைரியமான கருத்தை பதிவு செய்தார். “உடலுறவு என்பது நேரம், காலம் பார்த்து செய்யப்படுவது அல்ல. ஆணுறை ஒரு கருத்தடை சாதனமாகவும், நோய் பரவலை தடுக்கும் கருவியாகவும் உள்ளது.
அதை அருவருக்கத்தக்க விஷயமாக பார்ப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆணுறை குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டுமெனில், விளம்பரங்கள் மிக முக்கியம்,” என்று காஜல் தனது பஞ்ச் டயலாக்கில் வாதிட்டார்.
இந்த சர்ச்சை, ஆணுறை விளம்பரங்கள் குறித்த சமூக புரிதல் மற்றும் விழிப்புணர்வு தேவை குறித்த விவாதங்களை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.
காஜல் அகர்வாலின் இந்த தைரியமான கருத்து, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுபொருளாகியுள்ளது.