ஸ்ரீலீலாவுடன் அமைச்சர் மகன்.. லீக் ஆன வீடியோ.. வரம்பு மீறி அந்த உறுப்பில் முத்தம்.. அதிரும் இண்டர்நெட்!

ஸ்ரீலீலாவுடன் அமைச்சர் மகன்.. லீக் ஆன வீடியோ.. வரம்பு மீறி அந்த உறுப்பில் முத்தம்.. அதிரும் இண்டர்நெட்!

ராதாகிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில், கர்நாடக முன்னாள் அமைச்சர் கலி ஜனார்த்தன ரெட்டியின் மகன் கிரீத்தி ரெட்டி அறிமுக கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜூனியர்’.

இந்த படத்தில் பிரபல நடிகை ஸ்ரீலீலா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக, ‘வைரல் வய்யாரி’ என்ற பாடல் காட்சியில் ஸ்ரீலீலாவின் நடனம் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.

ஆனால், இந்த பாடலில் இடம்பெற்ற சில காட்சிகள் இணையத்தில் கசிந்து ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.இந்த பாடலில், கிரீத்தி ரெட்டி ஸ்ரீலீலாவை இடுப்பில் தூக்கி, அவரது மார்பின் மேல் முத்தமிடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த காட்சிகள் சென்சார் செய்யப்படாமல் அப்படியே வெளியிடப்பட்டதால், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் இது குறித்து பலர் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

“பிரபலமாவதற்கு நேரம் எடுக்கும், ஆனால் பணம் உடனே புகழை வாங்கி தரும்,” என்று சிலர் விமர்சித்துள்ளனர். மேலும், “பணத்திற்காக இப்படியா செய்ய வேண்டும்?” எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த பாடல், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி, பெரும் வெற்றி பெற்றாலும், இந்த சர்ச்சை காட்சிகள் படத்தின் மீதான கவனத்தை மாற்றியுள்ளன. ஸ்ரீலீலாவின் துடிப்பான நடனமும், கிரீத்தியின் ஆற்றல்மிக்க அறிமுகமும் பாராட்டப்பட்டாலும், கதையின் வழக்கமான தன்மையும், ஸ்ரீலீலாவின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததும் விமர்சிக்கப்பட்டுள்ளன.

ஜெனிலியா டி’சோசா, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்த இந்த படம், கிரீத்தியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த சர்ச்சை குறித்து படக்குழுவினர் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இருப்பினும், இந்த காட்சிகள் திரையரங்குகளில் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், இது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.

LATEST News

Trending News