சூப்பர் சிங்கரில் இருந்து விலகிய ப்ரியங்கா: பிக்பாஸ் கன்பர்மா?

சூப்பர் சிங்கரில் இருந்து விலகிய ப்ரியங்கா: பிக்பாஸ் கன்பர்மா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர் என்பதும் இந்த நிகழ்ச்சியை மாகாபா மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கினார்கள் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து அவர் விலகி உள்ளதாக தெரிகிறது. அவருக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது ஷிவாங்கி என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது

ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு முன் போட்டியாளர்களாக இருந்த நான் இன்று அதே போல் நிகழ்ச்சிக்கு ஆங்கராக மாறியுள்ளேன் என்று கூறியதிலிருந்து ஷிவாங்கி தொகுப்பாளினியாக மாறி உள்ளார் என்பதும் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதி என்பதும் தெரியவருகிறது

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி கனி கலந்து கொள்வது உறுதி என சின்னத்திரை வட்டாரங்களில் கூறியுள்ளன என்பதை பார்த்தோம்.

LATEST News

Trending News

HOT GALLERIES