பட வாய்ப்புக்காக தவறான உறவுக்கு அழைத்த நபர்- வெளிப்படையாக கூறி வெளுத்து வாங்கிய அனிதா சம்பத்

பட வாய்ப்புக்காக தவறான உறவுக்கு அழைத்த நபர்- வெளிப்படையாக கூறி வெளுத்து வாங்கிய அனிதா சம்பத்

சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் அனிதா சம்பத்.

பின் விஜய்யில் பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டு சிலரின் வெறுப்பையும் பெற்றார். நிகழ்ச்சியை முடித்த அனிதா சம்பத் தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வருகிறார்.

சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் பெண்கள் சிலருக்கு ஒத்துழைப்பு அளித்தால் தான் முன்னேற முடிகிறது என்ற பேச்சு இருக்கிறது.

அதற்கு ஏற்றார் போல் அண்மையில் இளம்பெண் ஒருவரை தவறான விஷயத்திற்கு ஒருவர் அழைத்துள்ளார்.

அந்த பதிவை அனிதா சம்பத்திற்கு அவர் பகிர அப்படியே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து, பட வாய்ப்புகள் தருகிறேன் என இளம் பெண்களை பலரையும் தவறான பாதைக்கு அழைக்கும் இந்த மாதிரி சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் என பதிவு செய்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES