திருமணமான ஒரே நாளில் சினேகனுக்கு ஏற்பட்ட பிரச்சினை: காணொளியினை வெளியிட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

திருமணமான ஒரே நாளில் சினேகனுக்கு ஏற்பட்ட பிரச்சினை: காணொளியினை வெளியிட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

பிரபல பாடல் ஆசிரியரான சினேகன் நேற்று தான் காதலியும், நடிகையுமான கன்னிகாவை திருமணம் செய்தார்.

பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்களின் திருமணத்தினை, பல பிரபலங்கள் முன்னின்று நடத்தி வைத்தனர். இந்நிலையில் இவரது திருமணம் சில விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.

நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு ஞாபகம் இருந்திருக்கும் டைனமிக் திருமணம். ஆம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சினேகன் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டார். இத்திருமணம் டைனமிக் புரட்சி திருமணம் என்று கூறப்பட்டது.

இந்த திருமணத்தில் பேசிய சினேகன், ஆரிய வர்கத்தின் ஆர்ப்பரிப்பு ஆக்ரமிப்பும் தமிழன் மீது விழுவதற்கு முன்னாள் எப்படி இருந்தானோ அப்படியே மீட்டுக் கொண்டு வரும் ஒரு புரட்சி தான் இந்த டைனமிக் திருமணம். இதை தமிழகர்கள் தெரிந்து கொள்வார்கள்.

இன்னும் 10 ஆண்டுகளுக்குள் ஒரு அரசியல் புரட்சியை இந்த டைனமிக் திருமணம் ஏற்படுத்தும் என்று பேசியதுடன், இந்த திருமணத்தில் விதவை பெண்கள் மாலை எடுத்துக் கொடுக்க தாலி காட்டாமல் நடைபெற்றது.

மேலும், திருமணத்திற்கு பின்னர் மணமக்களை வாழ்த்த வந்த பலரும் பாரபட்சம் பார்க்காமல் மணமக்களை கட்டி தழுவி முத்தமும் கொடுத்தனர்.  இச்சம்பவம் அந்நாளில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் இக்காட்சியினை தற்போது பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், சினேகன் ஏன் டைனமிக் திருமணம் செய்யவில்லை எதுவுமே அறியாத எளிய மக்களிடம் dynamic திருமணம் என பொய் சொல்லி ஏமாற்றிய சினேகன். இபோது அவர் திருமணத்தையும் இதே போல செய்வாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

LATEST News

Trending News