ஆபாச ஏஐ சர்ச்சை.. அர்ஜுன் ரெட்டி பட ஹீரோயின் ஒரு வழியா வாய் திறந்திட்டாரு.. ரொம்ப மோசம்!
சென்னை: அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களை கவர்ந்த நடிகை ஷாலினி பாண்டே தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எல்லை மீறிய கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து வந்த நிலையில், ஒரு சில டாப்லெஸ் மற்றும் பிகினி போட்டோக்களையும் ஷேர் செய்து வந்தார்.
சாய் பல்லவியை வைத்தே ஏஐ பிகினி போட்டோக்களை ரெடி பண்ணி வைரலாக்கிய விஷமிகள் ஷாலினி பாண்டே நிர்வாணமாக இருப்பது போன்ற ஏஐ வீடியோவை அவரது போட்டோக்களை வைத்து எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பத் தொடங்கினர்.
பார்ப்பதற்கு அச்சு அசலாக ஷாலினி பாண்டேவே ஷேர் செய்தது போல அந்த வீடியோ இருந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக வைரலானது. இதுவரை ஷாலினி பாண்டே அதுபற்றி எதுவும் கருத்து சொல்ல வில்லையே என்றும் அவர் அது தொடர்பாக மறுப்பும் தெரிவிக்கவில்லை, அவரே வெளியிட்ட வீடியோவா என சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அது ஃபேக் ஏஐ வீடியோ: அந்த வீடியோவை பார்த்த பலரும் அது ஏஐ வீடியோ தான் என கண்டுபிடித்து கமெண்ட் பக்கத்தில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டு வந்த நிலையில், சம்பந்தப்பட்ட நடிகை ஷாலினி பாண்டே தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முழுவதும் போலியாக சித்தரிக்கப்பட்ட ஏஐ வீடியோவால் நான் ரொம்பவே மனம் பாதிக்கப்பட்டுள்ளேன், எப்படி ஒரு டெக்னாலஜியை இவ்வளவு கேவலமாக பயன்படுத்த முடியுமா என்பதே அதிர்ச்சியாக உள்ளது. அந்த வீடியோவில் இருப்பது நான் கிடையாது. அதை யாரும் பார்க்கவோ, டவுன்லோடு செய்யவோ, ஷேர் செய்யவோ வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என நடிகை ஷாலினி பாண்டே பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் அட்வைஸ்: ஏஐ வீடியோக்களை பரப்புவது தவறு தான். ஆனால், நீங்க உங்க இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் கவர்ச்சி என்கிற பெயரில் ஆபாச போட்டோக்களையும் வீடியோக்களையும் அதிகம் ஷேர் செய்யாமல், டீசன்ட்டான அழகான போட்டோக்களையும் உங்க நடிப்புத் திறமைகள் அடங்கிய ரீல்ஸ் வீடியோக்களையும் ஷேர் செய்யலாமே என பதிலுக்கு நெட்டிசன்கள் ஷாலினி பாண்டேவுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.