பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்: வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட செந்தில்.. அதிர்ச்சியில் மீனா!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்: வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட செந்தில்.. அதிர்ச்சியில் மீனா!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் செந்தில் வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதற்கான காரணம் என்ன தெரியுமா? இதோ பாருங்க.

லஞ்சம் வாங்கிய செந்தில்

அரசு வேலையில் உள்ள செந்தில் லஞ்சம் வாங்கியதால் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கினார். லஞ்சம் வாங்கியவர்கள் கைது செய்து அழைத்து செல்லும்போது, நாமும் அதே போல் கைது செய்யப்பட்டு விடுவோமோ என அதிர்ச்சியடைந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்: வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட செந்தில்.. அதிர்ச்சியில் மீனா!! | Senthil Suspended In Pandian Stores Serial

பின்பு, இந்த விஷயம் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிய வர, பாண்டியன் தனது மகன் செந்திலை அடித்து, வாங்கிய லஞ்ச பணத்தை நல்ல வழியில் செலவு செய்துவிட்டுத்தான் மீண்டும் வீட்டிற்குள் வரவேண்டும் என கூறினார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்: வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட செந்தில்.. அதிர்ச்சியில் மீனா!! | Senthil Suspended In Pandian Stores Serial

அதன்படி, தான் வாங்கிய லஞ்ச பணத்தை மற்றவர்களுக்கு உதவும் வகையில் செலவு செய்து, இனி லஞ்சம் வாங்கமாட்டேன் என பாண்டியனிடம் வந்து மன்னிப்பும் கேட்டார் செந்தில்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட செந்தில்

இந்நிலையில், திடீரென செந்திலை வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேல் அதிகாரி செந்திலை அழைத்து சஸ்பெண்ட் ஆர்டரை கொடுக்க, அதிர்ச்சியடைகிறார் செந்தில்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்: வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட செந்தில்.. அதிர்ச்சியில் மீனா!! | Senthil Suspended In Pandian Stores Serial

"லஞ்சம் வாங்கிய கேஸில் உங்களுடைய பெயர் நிறைய அடிபடுகிறது. அதனால் இந்த சஸ்பெண்ட் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் இன்வெஸ்டிகேஷன் நடக்கும், அதில் நீங்கள் லஞ்சம் வாங்கவில்லை என நிரூபிக்கப்பட்டால் தான் வேலை மீண்டும் கிடைக்கும்" என மேல் அதிகாரி கூறிவிட்டார்.

இதனை மீனாவிடம் செந்தில் கூற, மீனா ஆறுதல் கூறுகிறார். மேலும், செந்தில் சஸ்பெண்ட் ஆன விஷயம் செய்திகளில் வந்துவிடுகிறது. இதை நினைத்து மனஉளைச்சலுக்கு ஆளாகிக்கிறார் செந்தில். 

LATEST News

Trending News

HOT GALLERIES