டாக்சிக் ப்ரோமோஷனுக்கு சென்ற நயன்தாரா.. ஆத்தாடி ட்ரெஸ், நகையெல்லாம் இம்புட்டு விலையா?
சென்னை: நடிகை நயன்தாரா இப்போது டாக்சிக் திரைப்படத்தில் யஷ்ஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கீது மோகன்தாஸ் இயக்கியிருக்கும் அப்படத்தில் கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் என ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். எப்போதும் ப்ரோமோஷன்களில் ஈடுபடாத நயன்; டாக்சிக் ப்ரோமோஷனுக்காக பெங்களூரு சென்றிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு அவர் அணிந்து சென்றிருந்த உடைகளின் விலை குறித்து தெரியவதிருக்கிறது.
தென்னிந்திய சினிமாவில் கடந்த பல வருடங்களாக டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. நானும் ரௌடிதான் திரைப்படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்த அவர்; சில வருடங்களுக்கு முன்பு திருமணமும் செய்துகொண்டார். உடனடியாக வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களையும் பெற்றெடுத்தார். தொடர்ச்சியாக பிஸியாக நடித்துவரும் நயன்; இப்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ்ஷுக்கு ஜோடியாக டாக்சிக் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
பெரிய நட்சத்திர பட்டாளம்: இதில் யஷ், நயன் தவிர்த்து கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் ஆகியோரும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். பாலிவுட், சாண்டல்வுட், கோலிவுட்டிலிருந்து இந்தப் படத்துக்காக நட்சத்திரங்கள் இணைந்திருப்பது இதன் மீது உச்சக்கட்ட ஹைப்பை ஏற்றி வைத்திருக்கிறது. முதலில் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு தள்ளிப்போயிருக்கிறது. கண்டிப்பாக இப்படம் பெரிய ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்களும், படக்குழுவினரும்.
ப்ரோமோஷன் பணிகள்: சில நாட்களுக்கு முன்புதான் ட்ரெய்லர் வெளியானது. மிரட்டலாக அமைந்திருந்தது. இதற்கிடையே நயன்தாராவை பொறுத்தவரை தான் நடிக்கு படங்களின் ப்ரோமோஷன்களில் கலந்துகொள்வதில்லை என்ற பாலிசியை வைத்திருக்கிறார். இடையே ஜவான் உள்ளிட்ட வெகு சில படங்களுக்கு மட்டுமே அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் டாக்சிக் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டிருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
என்ன காரணம்?: எந்த ப்ரோமோஷனுக்கும் வராத டாக்சிக் ப்ரோமோஷனுக்கு மட்டும் வந்தது ஏன் என விளக்கமும் அளித்திருந்தார் நயன். அவர் அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், "படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடாது என்ற எந்த எண்ணமும் எனக்கு இல்லை. அது எனக்கு சரியாக வராது என்பதால்தான் விலகியிருக்கிறேன். இந்த நிகழ்ச்சி எனக்கு சிறப்பானது. அதற்கு யஷ்தான் முக்கிய காரணம். அவர் ஒரு ஃபோன் கால் செய்தார். நான் இங்கே வருவதற்கு அதுவே போதுமானதாக இருந்தது.
யஷ்ஷிடம் ஆளுமை: இப்படத்தின் இயக்குநர் கீதுவும், நானும் 20 வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தில் சேர்ந்து நடித்தோம். அப்போது இருந்த கீது வேறு; இப்போது இருக்கும் கீது வேறு. அவர் என்னிடம் டாக்சிக் கதையை சொன்னதிலிருந்து, 'யார் இந்தப் பெண்? இதுவரை பார்க்காத இயக்குநராக இருக்கிறாரே' என்று வியந்தேன். நான் பல சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். அனைவருமே சிறந்தவர்கள்தான். ஆனாலும் யஷ்ஷிடம் இயல்பைவிடவும் அதிகமான ஆளுமை இருக்கிறது" என புகழ்ந்திருந்தார்.
ஆடைகளின் விலை: அவரது இந்தப் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. சூழல் இப்படி இருக்க அந்த ஈவென்ட்டுக்கு நயன் அணிந்து சென்றிருந்த புடவையின் மாடல் உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் தெரியவந்திருக்கிறது. அதன்படி, நயன் அணிந்திருந்த ஆரஞ்சு புடவை நீலா By அனுவர்தன் பிராண்டை சேர்ந்ததாம். இந்தப் புடவையில் வெளிச்சம் படும்போது ஷைனிங்காக தெரியும்படி வடிவமைத்திருக்கிறார்களாம்.
மேலும் நயன்தாரா அணிந்திருந்த நெக்லஸ், பிரேஸ்லட், மோதிரம் ஆகியவை நடிகை தமன்னாவின் நகை கடையில் வாங்கியதாம்.மொத்தம் 600க்கும் மேற்பட்ட வைரங்கள் அந்த நெக்லஸில் இருக்குமாம். புடவையின் விலை 22,900 ரூபாயாம். பிரேஸ்லட்டின் விலை 23 லட்சம் ரூபாய் என்றும், மோதிரத்தின் விலை 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என்றும் சொல்லப்படுகிறது.