டபுள்.. ட்ரிபிள் ட்ரீட்.. இவங்க காட்டுல தான் மழை.. மமிதா பைஜு, கயாடு லோஹர் உடன் இணைந்த துஷாரா விஜயன்!
சென்னை: தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட இளம் நடிகைகள் வாம்மா மின்னல் என வந்து சில ஆண்டுகளிலேயே காணாமல் போய் விடுகின்றனர். இன்னமும் த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகள் லீடு ரோலில் நடித்து வருவது பெரிய விஷயம் தான்.
இந்த ஆண்டு வரிசையா இரண்டு முதல் மூன்று படங்கள் என ஒரு சில நடிகைகள் நடித்துத் தள்ளி வருகின்றனர். அதுவும் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து படங்கள் வெளியாவதும் குறைந்த இடைவெளியில் வரிசையாக படங்கள் ரிலீஸ் என சில இளம் நடிகைகளின் காட்டில் அடை மழை தான் என்கின்றனர்.
மமிதா பைஜு, கயாடு லோஹர் வரிசையில் துஷாரா விஜயனும் அந்த வரிசையில் இணைந்துள்ளது தான் தூள் கிளப்பும் மேட்டர் என்கின்றனர்.
மமிதா பைஜு காட்டில் அடை மழை: இந்த ஆண்டு தனுஷ் உடன் இணைந்து மமிதா பைஜு நடித்த கர திரைப்படம் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் ஓடவில்லை. ஆனாலும், அடுத்து விஜய்யுடன் அவர் நடித்த ஜன நாயகன் திரைப்படம் வெளியாகி 300 கோடி வசூலை ஈட்டி அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாகவும் மாறியது. இந்நிலையில், ஜன நாயகன் வெளியாகி ஒரு மாசம் கூட ஆகாத நிலையில், அடுத்த வாரம் சூர்யாவுடன் மமிதா பைஜு நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. மேலும், நிவின் பாலியுடன் மமிதா பைஜு நடித்துள்ள பெத்லஹம் குடும்ப யூனிட் படமும் இதே ஆகஸ்ட் 21ம் தேதி வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி கூடிய விரைவில் விஷ்ணு விஷால் உடன் அவர் நடித்த இரண்டு வானம் படமும் இந்த ஆண்டு வெளியாகும் என்கின்றனர். ஒரு படத்துக்கு 2 கோடி முதல் 3 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம்.
கலக்கும் கயாடு லோஹர்: டிராகன் படத்துக்குப் பிறகு தமிழில் ஒரு வருடமாக எந்தவொரு படங்களும் இல்லாத சூழல் கயாடு லோஹரை கஷ்டத்தில் ஆழ்த்தினாலும் இந்த ஆண்டு வரிசைக் கட்டி அவரது படங்கள் வெளியாக உள்ளன. சமீபத்தில் அதர்வா முரளியுடன் அவர் நடித்த இதயம் முரளி படம் வெளியாகி அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்த நிலையில், அடுத்ததாக பாரடைஸ், இம்மார்ட்டல் படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. மேலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் மஞ்சணத்தி, ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 48 படத்திலும் கயாடு லோஹர் தான் ஜோடி.
ட்ரிபிள் ட்ரீட் துஷாரா விஜயன்: மமிதா பைஜு, கயாடு லோஹர் செம போட்டி போட்டு வரும் நிலையில், அவர்களுக்கு இணையாக துஷாரா விஜயனும் தூள் கிளப்பி வருகிறார். இந்த வாரம் மாதவன் நடிப்பில் வெளியாகவுள்ள ஜிடி நாயுடு பயோபிக் படத்தில் ஜிடி நாயுடுவின் 2வது மனைவியாக நடித்துள்ள துஷாரா விஜயன் அடுத்த வாரம் வெளியாகவுள்ள விஷாலின் மகுடம் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். ஏற்கனவே மலையாளத்தில் துஷாரா நடித்த காட்டாளன் படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது.

நயன்தாராவும் லிஸ்ட்டில் இருக்காரு: இளம் நடிகைகளுக்கு இப்போதும் செம டஃப் போட்டியாக நயன்தாராவும் இந்த லிஸ்ட்டில் இருப்பது தான் ஆச்சர்யம். கவின் உடன் அவர் நடித்துள்ள ஹாய் படம் மற்றும் யஷ் உடன் நடித்துள்ள டாக்ஸிக் படமும் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன. மேலும், சல்மான் கான் உடனும் இந்தியில் நயன்தாரா நடித்து வருகிறார். ஏற்கனவே மம்மூட்டி, மோகன்லால் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பேட்ரியாட் படத்தில் தனது என்ட்ரியை இந்த ஆண்டு நயன்தாரா போட்டது குறிப்பிடத்தக்கது.