ஆத்தி.. ஸ்லீவ்லெஸ் உடையில் முத்தின கத்தரிக்காய் நடிகை.. அந்த சிரிப்புக்கே லைக்ஸ் தெறிக்குது!
சென்னை: தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்தரிக்காய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை பூனம் பஜ்வா இன்ஸ்டாகிராமில் சில நிமிடங்களுக்கு முன்னதாக வெளியிட்ட ஸ்லீவ்லெஸ் உடை போட்டோக்கள் வேறலெவலில் லைக்குகளை குவித்து வருகிறது.
குமுதா போல இவரும் சப்ஸ்கிரிப்ஷனை ஆரம்பித்தால் இஷ்டத்துக்கு சம்பாதிக்கலாமே ஏன் இன்னும் அந்த பக்கம் போக மறுக்கிறார் என ரசிகர்களே கேள்வி எழுப்ப கிளம்பி விட்டனர்.
பட வாய்ப்புகள் குறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், சிரித்த முகத்துடன் எப்போதுமே மினி டிரெஸ்ஸில் தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை தவறாமல் கவர்ச்சி தீனிப் போட்டு வருகிறார் பூனம் பஜ்வா.
நயன்தாரா போல: ஹரி இயக்கத்தில் ஐயா படத்தில் நயன்தாரா அறிமுகம் ஆனது போல ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் 2008ம் ஆண்டு அறிமுகமானவர் தான் பூனம் பஜ்வா. 2005ம் ஆண்டு மொடட்டி சினிமா படத்தில் நவ்தீப் ஜோடியாக நடிக்கத் தொடங்கினார். ஜீவாவுடன் இவரது ஜோடி பொருத்தம் சூப்பராகவே அமைந்தது. தெனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களுக்கு இன்னமும் ரசிகர்கள் உள்ளனர்.

4 வருஷமா நோ படம்: ஆன்ட்டி ரோல் கொடுத்தாலும் நடிகிறேன் என ஆம்பள படத்தில் நடித்தார். கடைசியாக 2022ம் ஆண்டு குருமூர்த்தி எனும் தமிழ் படத்தில் நடித்தார். அதன் பின்னர் வேறு எந்தவொரு படத்திலும் அவருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. காதலருடன் திருமணம் செய்துக் கொள்வாரா என்று பார்த்தால் தொடர்ந்து லிவிங் டுகெதர் வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறார் என்கின்றனர். முத்தின கத்தரிக்காய் பட நடிகைக்கு இப்போ 41 வயதாகிறது.
இன்ஸ்டாகிராமில் படு தாராளம்: இன்ஸ்டாகிராமில் சுமார் 4.1 மில்லியன் ரசிகர்கள் பூனம் பஜ்வாவை ஃபாலோ செய்து வருகின்றனர். அதன் மூலமாகவே மாதம் மாதம் கணிசமான தொகை கிடைக்கிறது என்கின்றனர். சப்ஸ்கிரிப்ஷனை ஆரம்பித்தால் ஏகப்பட்ட லட்சங்களை இவர் சம்பாதிக்கலாம் என்கின்றனர். ஆனால், தனது ஃபாலோயர்களுக்காக தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார் பூனம் பஜ்வா.