பால்குடிக்கிற குழந்தையை விட்டு.. ஒரு மாசம் கூட ஆகல..பிகில் நடிகையின் அதிரடி கவர்ச்சி!
சென்னை: விஜயின் 'பிகில்' திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அனிதா என்ற கதாபாத்திரத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்து "தன்னம்பிக்கைக்கு முகம் தேவையில்லை" என்ற வசனத்தின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் தாராளமாக கவர்ச்சி காட்டி இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
பிகில் பட நடிகை: நடிகை ரெபா மோனிகா ஜான், தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் இவர், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜோசப் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் கவனத்தைச் செலுத்தி வந்தார். இண்மையில் இவர் கர்ப்பமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்து கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இதைடுத்து ரெபா மோனிகா ஜானுக்கு, கடந்த ஜூலை 22-ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் செல்ல மகளுக்கு 'கியாரா ஜோசப்' என்று பெயர் சூட்டியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்து இருந்தார்.

பெண் குழந்தை: குழந்தை பிறந்து இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், நடிகை ரெபா மோனிகா ஜான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் வழக்கத்தை விடக் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக இருக்கும் உடைகளில் அவர் போஸ் கொடுத்துள்ளார். மேலும் அந்த போட்டோ கேப்ஷனில், மகளை தனியாக விட்டுச் செல்வது பெரும் சுமையாக இருந்தது. தாய்மையின் குற்றவுணர்வு, அவள் நலமாக இருக்கிறாளா என்று தொடர்ந்து விசாரித்தேன்.
ஒரு மாசம் கூட ஆகல : ஆனால் இரவு உணவிற்காக ஜோவுடன் இருக்கும் அந்த சில மணிநேரங்கள் எனக்கு தேவை என்பதை உணர்ந்தேன். பிரசவத்திற்கு பிந்தைய காலம் எளிதானது அல்ல, ஆனால் குணமடைவது என்பது உங்களுக்கு நீங்களே கருணை காட்டுவதும்தான் என்பதை நான் கற்றுக்கொள்கிறேன். வீட்டிற்கு வந்தபோது நான் நானாகவே உணர்ந்தேன், ஏது என்னை இன்னும் சிறந்த அம்மாவாக உணர வைத்தது என பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், குழந்தை பிறந்து ஒரு மாசம் கூட ஆகல... அதுக்குள்ள இவ்வளவு கிளாமரா?, பிரசவத்திற்குப் பிறகும் உடம்பை எவ்வளவு ஃபிட்டா வச்சிருக்காங்க என ஆச்சரியத்துடனும், விதவிதமாகவும் கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.