Deepika Padukone: அல்லு அர்ஜுனை வெயிட் பண்ணச் சொல்லுங்க.. தீபிகா படுகோனே போர்ஷனில் கவனம் செலுத்தும் அட்லீ

Deepika Padukone: அல்லு அர்ஜுனை வெயிட் பண்ணச் சொல்லுங்க.. தீபிகா படுகோனே போர்ஷனில் கவனம் செலுத்தும் அட்லீ

சென்னை: இயக்குநர் அட்லீ இயக்கத்தில், அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்து வரும் 'ராகா' திரைப்படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக உள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை தீபிகா படுகோனே தொடர்பான ஒரு தகவல் தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார். ஹாலிவுட் தரத்தில் ஆக்ஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அட்லீயின் முந்தைய படங்களைப் போலவே, இந்தப் படமும் பான் இந்தியா அளவில் வெளியாகும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தீபிகா படுகோனே தற்போது மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படும் நிலையில், 'ராக்கா' படத்தில் அவர் இடம்பெறும் காட்சிகளை படக்குழு முன்னுரிமை அடிப்படையில் வேகமாக படமாக்கி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

Atlee Speeds Up Deepika Padukone s Scenes in Allu Arjun s Raaka Here s Why the Team Is Rushing

தீவிரம்: கர்ப்ப காலம் அதிகரிக்க, அதிகரிக்க பேபி பம்ப் வெளிப்படையாக தெரியும் என்பதால், கதாபாத்திரத்தின் தொடர்ச்சியில் எந்த மாற்றமும் ஏற்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே அவரது காட்சிகளை முதலில் முடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக தீபிகா சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கே படக்குழு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராக்கா: இதற்கிடையில், 'கல்கி 2898 AD' படத்தின் இரண்டாம் பாகத்தில் தீபிகா படுகோனே இடம்பெறவில்லை என்ற தகவலும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பேசப்பட்டது. இருப்பினும், தற்போது அவரது முழு கவனமும் அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் 'ராக்கா' படத்தின் மீது இருப்பதாக கூறப்படுகிறது.

பரவலான பேச்சு: இதுவரை படக்குழு தரப்பில் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், தீபிகா படுகோனே தொடர்பான இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களிலும், திரையுலக வட்டாரங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மறுபுறம், அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணி முதல் முறையாக இணைந்திருப்பதால், 'ராக்கா' படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES