டிசி: திரை விமர்சனம்

டிசி: திரை விமர்சனம்

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கேபி, சஞ்சனா நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள 'டிசி' திரைப்படம் எப்படி உள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம், வாங்க.

 

கதைக்களம்

தலைவாசல் விஜய்யின் தலைமையிலான கூலிப்படையில் இருக்கும் லோகேஷ் கனகராஜ் (தேவதாஸ்), தனது நண்பர்களுடன் சேர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுகிறார். போலீசாரை தாக்கி அவர்களின் ஆயுதங்களை கடத்துகிறார், இது மிகப்பெரிய விஷயமாக மாறுகிறது. இந்த சமயத்தில் போலீஸ் ஒரு குடும்பத்தை சீரழிக்கிறது.

 

டிசி: திரை விமர்சனம் | Dc Movie Review

அந்த குடும்பத்திற்காக போலீஸை கொடூரமாக கொலை செய்கிறார் லோகேஷ் கனகராஜ். போலீஸ் இவர்களை தீர்த்துக்கட்ட தேடுகிறது. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது நண்பர்களுடன் ஒரு லாட்ஜில் தலைமறைவாகிறார்கள். அங்கு சஞ்சனாவை (பார்வதி) சந்திக்கிறார் லோகேஷ்.

அந்த ஹோட்டலுக்கு வரும் போலீஸ் லோகேஷ் பிடிப்பது மட்டுமல்லாமல், லோகேஷுடன் பழகிய சஞ்சாவையும் சுட்டுவிடுகிறது. இதனால் சஞ்சனா இறந்துவிடுகிறார். அவரை காப்பாற்ற முடியும் என்கிற சூழல் இருந்தும் அதை அந்த போலீஸ் அதிகாரி செய்யாமல் கொன்றுவிடுகிறார். போலீஸ் பிடியில் உள்ள லோகேஷ், என்கவுண்டரில் இருந்து தப்பிக்கிறார்.

 

டிசி: திரை விமர்சனம் | Dc Movie Review

இதன்பின், விலை மாதுவாக இருக்கும் வாமிகா (சந்திரா) கேபியை சந்திக்கிறார். தனக்கு பிடிக்காத வாழ்க்கையில் இருக்கும் வாமிகா அங்கிருந்து லோகேஷ் உதவியுடன் தப்பிக்கிறார். வெவ்வேறு பாதையில் பயணித்த இவர்கள் இருவரும், உயிருக்கு பயந்து ஓடுவதும், தங்களுக்கு வந்த பிரச்சனைகளை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதும்தான் படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை, அனிருத் அனிருத் அனிருத் மட்டும்தான். மொத்த திரைப்படத்தையும் தனது பின்னணி இசையில் சுமந்து சென்று பட்டையை கிளப்பியுள்ளார். இடைவேளை, கிளைமாக்ஸ் என குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு இல்லாமல், முதல் காட்சியில் தொடர்ந்து கிளைமாக்ஸ் கிரெடிட்ஸ் வரை அனிருத்தின் பின்னணி இசை வேற லெவலில் உள்ளது. இப்படியொரு பின்னணி இசையில் மொத்த திரைப்படத்தையும் பார்க்கும் அனுபவம் என்பது மிகவும் வித்தியாசமாக இருந்தது.

 

டிசி: திரை விமர்சனம் | Dc Movie Review

இதுவரை இயக்குநராக தமிழ் சினிமாவில் பல பாராட்டுகளை பெற்ற லோகேஷ் கனகராஜ், தற்போது டிசி படத்தில் ஹீரோவாகவும் நன்றாக நடித்துள்ளார். தனக்கு என்ன கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதோ, அதை திரையில் தனது நடிப்பால் தெளிவாக வழங்கியுள்ளார். முதல் படத்திலேயே ஹீரோவாக முத்திரை பதித்துள்ளார். இது லோகேஷுக்கு ஒரு புதிய திருப்பம்.

நடிகை சஞ்சனாவிற்கு குறுகிய காட்சிகள் என்றாலும், அவருடைய கதாபாத்திரத்தின் தாக்கம் இறுதி வரை உள்ளது. சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகை வாமிகா கேபி, நம் கவனத்தை ஈர்க்கிறார். குறிப்பாக இடைவேளைக்கு பின் அவருடைய கதாபாத்திரத்தின் Transformation திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக மாற்றியது.

 

டிசி: திரை விமர்சனம் | Dc Movie Review

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் சுவாரஸ்யமான திரைக்கதை சிறப்பாக வடிவமைத்துள்ளார். திரைக்கதையில் தொய்வு என்று பெரிதாக எதுவும் இல்லை. அதுவே இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, சஞ்சனா - லோகேஷ் கனகராஜுக்கு இடையிலான காட்சிகள், வாமிகா கேபி தனது சுதந்திரத்தை உணர்ந்த காட்சி, இடைவேளை, கிளைமாக்ஸ் என படத்தை தரமாக திரைக்கதையில் செதுக்கியுள்ளார். இவை அனைத்திற்கும் மிகப்பெரிய அளவில் அனிருத்தின் பின்னணி இசை உதவியுள்ளது.

இப்படத்தை பொறுத்தவரை வன்முறை என்பது இருமுனை கத்தி என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், வன்முறை தான் இப்படத்தின் பிளஸ், அதே சமயம் ஏன், எதற்காக இவ்வளவு வன்முறை என்று கேள்வி எழுகிறது. ஒளிப்பதிவு மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். குறிப்பாக ஒளிப்பதிவு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் காட்டிய விதம் மிகவும் அழகாக இருந்தது.

 

டிசி: திரை விமர்சனம் | Dc Movie Review

பிளஸ் பாயிண்ட்ஸ்

அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள்

லோகேஷ் கனகராஜ், வாமிகா கேபி மற்றும் சஞ்சனா

நடிகர்களின் பங்களிப்பு

திரைக்கதை இடைவேளை, கிளைமாக்ஸ் காட்சிகள்

வன்முறை காட்சிகள்

மைனஸ் பாயிண்ட்ஸ்

வன்முறை காட்சிகள் இப்படத்திற்கு பலமாகவும் உள்ளது, அதே சமயம் பலவீனமாகவும் உள்ளது. மற்றபடி பெரிதாக குறை என்று சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை.

மொத்தத்தில், வன்முறை அதிகமாக இருந்தாலும், தமிழ் சினிமாவின் சிறப்பான, தரமான சம்பவம் தான் இந்த DC.

டிசி: திரை விமர்சனம் | Dc Movie Review

LATEST News

Trending News

HOT GALLERIES