24 வயதில் படுக்கையறை போட்டோஷூட்.. கிளாமரில் மிரட்டும் 'பாபநாசம்' பாப்பா எஸ்தர் அனில்!
சென்னை: 'பாபநாசம்' படத்தில் கமல்ஹாசனின் சின்ன மகளாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை வென்ற நடிகை எஸ்தர் அனில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிர்ந்து சோஷியல் மீடியாவை தன்பிடியில் வைத்துஇருக்கிறார்.
'பாபநாசம்' தந்த பிரபலம்: மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான எஸ்தர் அனில், சூப்பர் ஹிட் அடித்த 'த்ரிஷ்யம் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலம் ஆனார். த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாபநாசம்' படத்தில் கமல் ஹாசன்,கௌதமி ஜோடியின் இளைய மகளாக நடித்து, தமிழ் ரசிகர்களின் அன்பையும் பாராட்டுகளையும் அள்ளினார். அதனை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இன்ஸ்டாவை சூடேற்றிய எஸ்தர் அனில்: சிறுவயதிலிருந்தே போட்டோஷூட் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களில் ஆர்வம் கொண்ட எஸ்தர் அனில், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். தற்போது 24 வயதாகும் இவர், அண்மையில் கென்யா நாட்டிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த விதவிதமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்த நிலையில், தற்போது படுக்கையறையில் எடுக்கப்பட்ட சில கவர்ச்சியான போட்டோக்களையும் பகிர்ந்து இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
குவியும் லைக்குகள் : நேற்று வரை 'சின்னப் பொண்ணு' என்று பார்த்த எஸ்தர் அனிலா இது? என ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைந்து போய்உள்ளனர். இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு எஸ்தரின் ரசிகர்கள் லைக்குகளையும்,அழகான மாற்றம் என பாராட்டி வருகின்றனர். தற்போது வரை எஸ்தர் அனிலுக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை அந்த வாய்ப்பை பிடிப்பதற்காகத்தான் இணையத்தில் தாராள கவர்ச்சி காட்டி வருகிறார்.