களத்தில் இறங்கிய ஜேசன் சஞ்சய்.. கண்டுக்காம இருக்கும் லோகேஷ் கனகராஜ்.. டிசி டிக்கெட் புக்கிங் எப்படி?

களத்தில் இறங்கிய ஜேசன் சஞ்சய்.. கண்டுக்காம இருக்கும் லோகேஷ் கனகராஜ்.. டிசி டிக்கெட் புக்கிங் எப்படி?

சென்னை: இன்னும் ரிலீஸ் தேதியே உறுதிசெய்யப்படாத சிக்மா படத்துக்காக விஜய் மகன் ஜேசன் சஞ்சய் களத்தில் இறங்கி தனது படத்துக்கான புரமோஷன் வேலைகளை தீயாக செய்து வருகிறார். தெலுங்கில் சுமா, தமிழில் டிடி நீலகண்டன் உடன் அவர் அளித்த பேட்டிக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி படத்துக்கு பெரிய புரமோஷனாக மாறியுள்ளது.

ஆனால், நாளை வெளியாகவுள்ள டிசி படத்துக்கு இதுவரை அஜித் குமார் ரேஞ்சுக்கு எந்தவொரு புரமோஷனையும் செய்யாமல் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மற்றும் ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ் உள்ளதாக சோஷியல் மீடியாவில் ரசிகர்களே ஃபீல் பண்ணும் அளவுக்கு நிலைமை படுமோசமாக உள்ளது.

கடைசியாக சன் பிக்சர்ஸ் சார்பில் அனிருத் நடத்திய டிசி ரேவ் கான்செர்ட் மட்டுமே இந்த படத்துக்கான புரமோஷனாக இருந்தது என்றும் படக்குழு மொத்தமாகவே படத்தை புரமோட் செய்யும் எண்ணத்திலேயே இல்லையே? ஏன் என்கிற கேள்விகளும் டிசி படத்தின் டிக்கெட் புக்கிங் எப்படி இருக்கிறது என்றும் ரசிகர்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

கூலி ட்ரோல் தான் காரணமா?: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தில் இருந்து அவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய கூலி படம் வரைக்குமே ஓடி ஓடிப்போய் புரமோஷன் செய்து தனது படங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர் தான். லியோ படத்திற்கு புரமோஷன் செய்யும் போதே ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்தார். ஆனால், அதை விட பல மடங்கு அதிக அவமானங்களை கூலி படத்தின் ரிலீஸுக்குப் பிறகு சந்தித்த நிலையில், சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுத்தார். அதன் காரணமாகவே மீடியாக்களை சந்திக்காமல் தவிர்க்கிறாரா லோகேஷ் கனகராஜ் என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

Why Lokesh Kanagaraj and Arun Matheswaran remains silent in promoting DC Movie

அருண் மாதேஸ்வரன் அமைதி: தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகும் டிசி படம் ஆகஸ்ட் 7ம் தேதியான நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே ஏ சான்றிதழ் என்பதால் குடும்பத்தோடு படத்துக்கு வருவது கஷ்டம் தான். ஹீரோ லோகேஷ் கனகராஜ் போலவே படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரனும் அமைதியாக இருப்பது ஏன்? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். சிக்மா படத்தை இயக்கிய ஜேசன் சஞ்சய், ஜன நாயகன் படத்தை இயக்கிய எச். வினோத், நாளை வெளியாகவுள்ள ஜிடி நாயுடு படத்தின் நாயகன் மாதவன் என பலரும் படத்தை முடிந்தவரை புரமோட் செய்து வரும் நிலையில், இருவரும் இப்படி அமைதியாக இருக்க என்ன காரணம்? என்கிற கேள்விகள் சமூக வலைதளங்களில் கிளம்பி உள்ளன.

படம் பேசும்: ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்த நிலையில், தாங்கள் பேசுவதை விட தங்களுடைய படம் பேசட்டும் என நினைத்து இருவரும் அமைதியாக உள்ளார்களா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. டிசி படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Why Lokesh Kanagaraj and Arun Matheswaran remains silent in promoting DC Movie

டிசி டிக்கெட் புக்கிங் எப்படி இருக்கு?: அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிப்பில் உருவாகியுள்ள டிசி திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. சில பிவிஆர் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஆரஞ்சு நிறத்தில் டிக்கெட் புக்கிங் சிறப்பாக உள்ளது. ஆனால், பல திரையரங்குகளில் பச்சை நிறத்திலேயே டல் அடித்து காணப்படுகிறது. படம் வெளியான பிறகு வரும் மவுத் டாக் நல்லா இருந்தாதான் படத்தை வெற்றி பெறச் செய்யும் என்கின்றனர்.
 

LATEST News

Trending News

HOT GALLERIES