மீண்டும் குக் வித் கோமாளி செட்டிற்கு வந்த அந்த ஒரு பிரபலம்.... யார் பாருங்க, மாஸான புரொமோ இதோ

மீண்டும் குக் வித் கோமாளி செட்டிற்கு வந்த அந்த ஒரு பிரபலம்.... யார் பாருங்க, மாஸான புரொமோ இதோ

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி வித்தியாசமான கான்செப்டுடன் சமையல் ப்ளஸ் கலாட்டா என ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் பேவரெட் நிகழ்ச்சியாக உள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பாக தொடங்கிய இந்நிகழ்ச்சி பல மொழிகளில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடுகிறது. இப்போது விஜய் டிவியில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 7வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

 

புரொமோ

இநத 7வது சீசனில் நடிகை ரோஜா புதிய நடுவராக களமிறங்கினார், அதன்பின் தொகுப்பாளர்களாக மாகாபா ஆனந்த் மற்றும் ஷாலின் ஷோயா களமிறங்கினார்கள்.

அதேபோல் புதிய கோமாளிகள், நான் ஏற்கெனவே பார்த்து பழகிய சின்னத்திரை பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். கடந்த வாரம் அய்யனார் துணை மற்றும் அழகே அழகு சீரியல் நடிகர்கள் சிலர் நிகழ்ச்சிக்கு ஸ்பெஷல் விருந்தினராக கலந்துகொண்டனர்.

இப்போது குக் வித் கோமாளி 7வது சீசனில் இந்த வாரம் ஒரு ஸ்பெஷல் நபர் என்ட்ரி கொடுக்கிறார், அவரை ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்தார்கள் என்றே கூறலாம். அவர் வேறு யாரும் இல்லை தொகுப்பாளர் ரக்ஷன் தான்.

இந்த வாரம் மீண்டும் குக் வித் கோமாளி செட்டிற்கு வர அவரை எல்லோரும் சந்தோஷமாக வரவேற்றுள்ளனர். 

https://youtu.be/kmV4l8YS7CA?si=0L0n8jrqgTp7bwOX

LATEST News

Trending News