‘மார்டன் பியூட்டி‘ சுஜிதா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ‘தனம்’க்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை!

‘மார்டன் பியூட்டி‘ சுஜிதா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ‘தனம்’க்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை!

சென்னை: குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இன்று சின்னத்திரையின் முக்கிய நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருப்பவர் நடிகை சுஜிதா. சத்யராஜ், பாக்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்திருந்த அவர், பின்னர் சீரியல் உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்: அதில் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் "தனம்" என்ற கதாபாத்திரத்தில் நடித்தது சுஜிதாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. அண்ணன்-தம்பி உறவுகளை மையமாக கொண்டு உருவான இந்த தொடரில், குடும்பத்தை ஒன்றாக கட்டிப்பிடித்து நிற்கும் மூத்த மருமகளாக அவர் வெளிப்படுத்திய எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல், தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்த இந்த தொடர் 'வதினம்மா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டபோதும் அதே கதாபாத்திரத்தில் சுஜிதா நடித்திருந்தார்.

Sujitha photos

நடிகை சுஜிதா: 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் பாகம் நிறைவடைந்த பிறகும், இரண்டாம் பாகத்தில் சுஜிதா நடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது. ஆனால், இரண்டாம் பாகத்தில் சுஜிதா நடிக்காததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிகை நிரோஷா நடித்து வருகிறார். இருந்தாலும், சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் சுஜிதா, தனது ரசிகர்களை ஏமாற்றாமல் அடிக்கடி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

Sujitha photos

மார்டன் பியூட்டி: அந்த வகையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இயற்கை சூழலில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் கருப்பு நிற மார்டன் டாப் மற்றும் லைட் ப்ளூ ஜீன்ஸில் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார் சுஜிதா. மிகவும் சிம்பிளான லுக்கிலேயே எலெகண்டாக தெரியும் அவரது தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக மேக்கப் அதிகம் இல்லாமல் நேச்சுரல் பியூட்டியாக காட்சியளிக்கும் சுஜிதாவின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், "மார்டன் பியூட்டி" என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

LATEST News

Trending News

HOT GALLERIES