திருமணத்திற்கு முன்பே ஒருதலை காதல்!! சிவகார்த்திகேயனின் காதல் ஸ்டோரி..
தமிழ் சினிமாவில் கலக்க துடிக்கும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்னணியும் கிடையாது, தனது சொந்த உழைப்பால் திறமையை பல மேடைகளில் வெளிக்காட்டி முதலில் சின்னத்திரையில் கலக்கினார்.
அதன்மூலம் வெள்ளித்திரை வர, வாய்ப்பு கிடைக்க அப்படியே அந்த ஏணியை பிடித்துக்கொண்டு தரமான படங்களாக தேர்வு செய்து நடித்து மக்களை மகிழ்விக்க இப்போது முன்னணி நாயகனாக முன்னேறி உள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் மதராஸி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அடுத்த ஆண்டு 2026ல் பராசக்தி படம் ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஆர்த்தியை திருமணம் செய்து 3 குழந்தைகளை பெற்றெடுத்தார் சிவகார்த்திகேயன். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஒருதலையாக காதலித்தது குறித்து பேசியுள்ளது தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், எனக்கு ஒரு தலைக்காதல் இருந்தது, ஆனால் அது சில நாட்களில் கரைந்துவிட்டது. ஏனென்றால் அவள் சீக்கிரமே இன்னொரு பையனுடன் கமிட்டாகிவிட்டாள். என் கல்லூரி நண்பர்கள் சிலருக்கு மட்டுமே இந்த விஷயம் தெரியும், அதன்பின் அவள் வேறு ஒரு பையனை திருமணம் செய்து கொண்டாள் என்று எனக்கு தெரியவந்தது. அப்போது எதுவும் செய்ய பயமாக இருந்தது.
ஏனென்றால் உங்கள் மகன் இப்படி செய்துவிட்டான் என்று வீட்டில் பெற்றோரிடம் யாராவ்து சொல்லிவிட்டால் பிரச்ச்னையாகிவிடும் என்று அமைதியாகிவிட்டேன். எந்த விதத்திலும் நான் குறும்புத்தனம் செய்பவன் அல்ல, நான் டிவியில் தொகுப்பாளராக இருந்தபோது ஒரு மாலில் தூரத்தில் இருந்து அந்தப்பெண்ணை மீண்டும் பார்த்தேன், ஆனால் பேசவில்லை.
அவள் வேறொரு பையனை திருமணம் செய்து கொண்டாள் என்று தெரிந்தபோது, முன்பு நான் பார்த்தபோது அவள் காதலித்த பையன் வேறு ஒருவன். அப்பாடா, அவனுக்கும் அவள் கிடைக்கவில்லை என்று நிம்மதியுடன் மகிழ்ச்சியடைந்தேன் என்று சிவகார்த்திகேயன் ஓபனாக பேசியிருக்கிறார்.