5 நீமிஷத்துக்கு 5 கோடி சம்பளம்!! 800 கோடி பட்ஜெட்டில் பூஜா ஹெக்டே கமிட்?
தமிழில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பூஜா ஹெக்டே. இப்படம் சரியான வரவேற்பு பெறாததால், தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார் பூஜா.
அதன்பின் முன்னணி தெலுங்கு நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையாக வலம் வருகிறார். பல படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டும் வரும் பூஜா ஹெக்டே, சமீபத்தில் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில் மோனிகா என்ற பாடலுக்கு ஆட்டம்போட்டு மிகப்பெரியளவில் டிரெண்ட்டாகினார்.
அல்லுர் அர்ஜுனுடன் துவ்வாட ஜெகந்நாதம், ஆல வைகுந்தபுரமுலு போன்ற படங்களில் நடித்தார். தற்போது 3வது முறையாக அல்லு அர்ஜுனுடன் இணையவுள்ளாராம்.
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லீ கூட்டணியில் பிரமாண்டமான முறையில் உருவாகி வரும் AA22xA என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்காக பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இப்பாடலுக்கு ஆட்டம் போட பூஜாவுக்கு ரூ. 5 கோடி வரை சம்பளமாக வழங்க முன்வந்துள்ளார்களாம். இப்படத்தில் தீபிகா படுகோன், ஜான்வி கபூர், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட 6 நடிகைகள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இருப்பினும் பூஜா ஹெக்டேவின் சிறப்பு பாடல் குறித்த தகவலை படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.