ரோபோ சங்கர் மரணத்தில் மனைவியின் நடனம்: உருக்கமாக பேசிய மகள்
ரோபோ சங்கர் மரணத்தில் அவர் மனைவி நடனமாடியது தொடர்பில் மகள் உருக்கமான சில வார்த்தைகளை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார் என தகவல் வெளியாகி இருந்தது.
இருந்தும் சிகிச்சை பலனின்றி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது இறுதி சடங்கில் நடனமாடியது பல விமர்சனங்களை பெற்றது.
இதுகுறித்து பேசிய ரோபோ சங்கர் மருமகள், அவங்க டான்ஸ்லதான் அவங்களுடைய அன்பை வெளிப்படுத்துவாங்க
அப்பா இல்லாமல் முதல்முறையாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பது கஷ்டமாக இருக்கிறது. என்னுடைய அப்பாவிற்கு இதுவரை உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.
அப்பா விட்டுச் சென்ற கடமைகளை முடிப்போம் அவர் சென்ற பாதையில் தொடர்ந்து பயணிப்போம். இதற்கு ரசிகர்கள், பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
எந்த இடத்தில் சிரிப்பும் நகைச்சுவையும் இருக்கிறதோ, அந்த இடத்தில் அப்பா இருப்பார் என்று அவர் உருக்கமாக கூறினார்.