பீச்சில் ஹாயாக காத்து வாங்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர்..புகைப்படம்..
தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா பயணத்தை தொடங்கியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். அதன் பின், விஜய் டிவி பக்கம் வந்தவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நாயகியாக நடித்து ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.
அதன் பின், மேயாத மான் படம் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார்.
இவர் கமிட்டாகி நடித்த சில தோல்வி படங்களும் உள்ளது. கடைசியாக பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் டிமான்டி காலனி 2 படம் வெளியாக அவருக்கு வெற்றியை கொடுத்தது.
இதனையடுத்து இந்திய 3, டிமாண்டி காலணி 3 உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கம் வராத பிரியா பவானி தற்போது, பீச்சில் ஹாயாக படுத்தபடி எடுத்த த்ரோபேக் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.